தினமலர்
சினிமா
டிவி
Podcast
iPaper
கோயில்கள்
புத்தகங்கள்
Subscription
திருக்குறள்
கடல் தாமரை
Dinamalar Logo

 

/செய்திகள்/கல்விமலர்/செய்திகள்/ஏ.ஐ.சி.டி.இ., விதிமுறை மீறும் கல்லூரிகள் அண்ணா பல்கலை அலட்சியம்

ஏ.ஐ.சி.டி.இ., விதிமுறை மீறும் கல்லூரிகள் அண்ணா பல்கலை அலட்சியம்

ஏ.ஐ.சி.டி.இ., விதிமுறை மீறும் கல்லூரிகள் அண்ணா பல்கலை அலட்சியம்


UPDATED : அக் 04, 2008 12:00 AM

ADDED : ஜன 01, 1970 05:30 AM

Follow on GoogleFavourite on Google

UPDATED : அக் 04, 2008 12:00 AM ADDED : ஜன 01, 1970 05:30 AM


Follow on Google
அ நிறம் | அளவு

ஆனால், எந்தக்கல்லூரியும் இந்த விதிமுறையைக் கண்டுகொள்வதில்லை; அண்ணா பல்கலைக்கழகங்களும் இவற்றை மதிப்பதில்லை.
தொழில்நுட்ப படிப்புகளை வழங்கும் கல்லூரிகள் அனைத்தும், தங்களைப் பற்றிய பல்வேறு விவரங்களை தாங்களாக முன்வந்து தங்களது இணையதளத்தில் வெளியிட வேண்டும்.
அக்கல்லூரிகளுக்கு இணைப்பு வழங்கியுள்ள பல்கலைக்கழகங்களும், கல்லூரிகளைப் பற்றிய இந்த விவரங்களை தனது இணையதளத்தில் வெளியிட வேண்டும் என ஏ.ஐ.சி.டி.இ., தெரிவித்துள்ளது.
இந்த உத்தரவின்படி, கல்லூரிகளும், பல்கலைக்கழகங்களும் கீழ்கண்ட தகவல்களை தங்களது இணையதளத்தில் வெளியிட வேண்டும்.
அவற்றின் விவரம்: கல்லூரியின் பெயர், விலாசம், கல்லூரி அமைந்திருக்கும் இடம் விவரம், இணைப்பு பெற்றுள்ள பல்கலைக்கழகம், இணைப்பின் தன்மை (நிரந்தரம்/தற்காலிகம்), அங்கீகாரம் பெறப்பட்ட விவரம், கல்லூரி ஆரம்பிக்கப்பட்ட ஆண்டு, பல்கலைக்கழக இணைப்பு பெற்ற ஆண்டு, தரச்சான்று பெற்ற விவரங்கள், எந்த வகையான கல்லூரி (அரசு/அரசு உதவி/தனியார்) என்ற விவரங்களை வெளியிட வேண்டும்.
பாடப்பிரிவுகள் விவரம், மாணவர் சேர்க்கை மற்றும் தேர்ச்சி சதவீதம் விவரம், ஆசிரியர்கள் பற்றிய விவரம், நிலம், கட்டடம், வகுப்பறை, ஆய்வுக் கூடம், விடுதி, நூலகம், கம்ப்யூட்டர் ஆய்வகம், கற்பிக்கும் உபகரணங்கள் உள்ளிட்ட விவரங்களை வெளியிட வேண்டும்.
கலையரங்கம், விளையாட்டு மைதானம், மருத்துவ வசதி, ஆசிரியர்களுக்கான வீடுகள், உணவகம், போக்குவரத்து உள்ளிட்ட மேலும் பல விவரங்களைத் தெரிவிக்க வேண்டும். மொத்த வருவாய் மற்றும் செலவு கணக்கையும் வெளியிட வேண்டும்.
ஒவ்வொரு பாடப்பிரிவு வாரியாக உள்ள மொத்த இடங்கள், கல்விக் கட்டணம், ஐந்து ஆண்டு தேர்ச்சி விகிதம், ஆசிரியர் - மாணவர் விகிதம், ஆசிரியர்கள் எண்ணிக்கை (பேராசிரியர், உதவி பேராசிரியர் மற்றும் விரிவுரையாளர்கள்) விவரம், ஆசிரியர்கள் கல்வித்தகுதி (பிஎச்.டி., முதுநிலை, இளநிலை), அனுபவ விவரங்களை வெளியிட வேண்டும்.
ஒவ்வொரு ஆசிரியரின் பெயர், புகைப்படம், பிறந்த தேதி, கல்வித்தகுதி, தொழில் அனுபவம், ஆராய்ச்சி ஈடுபாடு ஆகியவற்றை வெளியிட வேண்டும். தொழில்நிறுவனங்களுக்கான கன்சல்டன்சி விவரம், ஆராய்ச்சி, மேம்பாட்டு விவரம், வேலைவாய்ப்பு கிடைத்த மாணவர்கள் விவரம், நிரந்தர மற்றும் தொடர் செலவுகள் விவரம் மற்றும் புதிய திட்டங்கள் பற்றிய விவரங்களை வெளியிட வேண்டும்.
தொழிற்கல்வி வழங்கும் கல்லூரிகள் மற்றும் அக்கல்லூரிகளுக்கு இணைப்பு வழங்கிய பல்கலைக்கழகங்கள், மேலே உள்ள விவரங்கள் அனைத்தையும் தங்களது இணையதளத்தில் வெளியிட வேண்டும் என ஏ.ஐ.சி.டி.இ., தெரிவித்துள்ளது. ஒவ்வொரு ஆண்டும் ஆகஸ்ட் 31ம் தேதி தகவல் அடிப்படையில் இந்த விவரங்களைத்தெரிவிக்க வேண்டும்.
ஆனால், பல கல்லூரிகள் இத்தகைய விவரங்களை வெளியிடுவதில்லை. அண்ணா பல்கலைக்கழகங்களும் இந்த விவரங்களை வெளியிடவில்லை. வெளியிட்டுள்ள சில கல்லூரிகளும், முழுமையான தகவல்களை வெளியிடவில்லை.
தங்களது இணையதளத்தின் அடிப்பகுதியில், கண்ணுக்குத் தெரியாத வகையில் வெளியிட்டிருக்கின்றன. தமிழகத்தைப் பொறுத்தவரை, பி.இ., பி.டெக்., அல்லாமல் எம் பி.ஏ., எம்.சி.ஏ., உள்ளிட்ட இதர தொழில்நுட்ப படிப்புகளை வழங்கும் கலை, அறிவியல் கல்லூரிகளும், அவற்றுக்கு இணைப்பு வழங்கியுள்ள பல்கலைக்கழகங்களும் இத்தகவல்களை வெளியிட வேண்டும்.
இதுகுறித்து தொழில்நுட்ப கல்வி இயக்குனர் ஜெயக்கொடி கூறுகையில், “இந்த ஆண்டிலிருந்து இந்த விதிமுறைகளை அனைத்து கல்லூரியும், அண்ணா பல்கலைக்கழகமும் கண்டிப்பாகப் பின்பற்றி, தகவல்களை வெளியிடத் தேவையான நடவடிக்கைகள் எடுக்கப்படும்,” என்றார்.
சென்னை அண்ணா பல்கலைக்கழகத் துணைவேந்தர் மன்னர் ஜவகரிடம் கேட்டபோது, “விரைவில் நடைபெறவுள்ள பொறியியல் கல்லூரி முதல்வர் கூட்டத்தில் இந்த விஷயம் குறித்து பேசி முடிவெடுக்கப்படும்,” என்றார்.

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us