தினமலர்
சினிமா
டிவி
Podcast
iPaper
கோயில்கள்
புத்தகங்கள்
Subscription
திருக்குறள்
கடல் தாமரை
Dinamalar Logo

 

/செய்திகள்/கல்விமலர்/செய்திகள்/அரசின் கொள்கை உருவாக்கத்தில் ஆசிரியர்கள் பங்கேற்க வலியுறுத்தல்

அரசின் கொள்கை உருவாக்கத்தில் ஆசிரியர்கள் பங்கேற்க வலியுறுத்தல்

அரசின் கொள்கை உருவாக்கத்தில் ஆசிரியர்கள் பங்கேற்க வலியுறுத்தல்


UPDATED : அக் 06, 2008 12:00 AM

ADDED : ஜன 01, 1970 05:30 AM

Follow on GoogleFavourite on Google

UPDATED : அக் 06, 2008 12:00 AM ADDED : ஜன 01, 1970 05:30 AM


Follow on Google
அ நிறம் | அளவு


மதுரை:
அமெரிக்காவில் உள்ளதைப் போல அரசின் கொள்கை உருவாக்கத்தில் உயர்கல்வித்துறை ஆசிரியர்கள் ஈடுபட வேண்டும் என்று மதுரை காமராஜ் பல்கலை., துணைவேந்தர் பேசினார்.
மதுரையில் மூட்டா சார்பிலான மாநாட்டின் இரண்டாம் நாளான அக்., 5ம் தேதி காலை ஊர்வலம் நடந்தது. தென்மண்டல மூட்டா செயலாளர் சதாசிவம் தலைமை வகித்தார்.
பின்பு நடந்த மாநாட்டில் மதுரை காமராஜ் பல்கலை., துணைவேந்தர் கற்பககுமாரவேல் மலர் வெளியிட்டு பேசியதாவது: இந்தியா சுதந்திரம் பெற்ற வேளையில் 20 பல்கலைக்கழகங்கள், 500 கல்லூரிகள், ஆயிரத்து 500 பேராசிரியர்கள், ஒரு லட்சம் மாணவர்களே இருந்தனர். இன்று 430 பல்கலைக்கழகங்கள், 21 ஆயிரம் கல்லூரிகள், ஒருலட்சம் பேராசிரியர்கள், ஒருகோடியே 30 லட்சம் மாணவர்கள் என அதிகரித்துள்ளனர்.
இதில் உயர்கல்வி பயில்வோர் 12 சதவீதமே. இதனை 11வது ஐந்தாண்டு திட்டத்தில் 16 சதவீதமாக அதிகரிக்க திட்டமிடப்பட்டுள்ளது. தனியார் கல்லூரிகளை பொறுத்தவரை 9 சதவீத கல்லூரிகள் மட்டுமே ‘ஏ’ கிரேட் பெற்றுள்ளன. 60 சதவீத கல்லூரிகள் ‘பி’ கிரேடிலும், 23 சதவீத கல்லூரிகள் ‘சி’ யிலும் உள்ளன. இந்த பி, சி கிரேட் கல்லூரிகளின் தரத்தை உயர்த்தவேண்டும்.
அமெரிக்காவில் தேசிய கல்வியாளர் சங்கங்கள் அரசின் கொள்கையை வகுப்பதில் பங்காற்றுகின்றன. அதேநிலை இங்கும் வேண்டும். 11வது திட்ட காலத்திற்கு அரசு 84 ஆயிரத்து 743 கோடி ரூபாய் ஒதுக்கீடு செய்துள்ளது. இது உயர்கல்விக்கு பெரும் உதவியாக இருக்கும். இவ்வாறு அவர் பேசினார்.

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us