தினமலர்
சினிமா
டிவி
Podcast
iPaper
கோயில்கள்
புத்தகங்கள்
Subscription
திருக்குறள்
கடல் தாமரை
Dinamalar Logo

 

/செய்திகள்/கல்விமலர்/செய்திகள்/மனநலம் குன்றியவர்களுக்கு வேலை வாய்ப்பு: மாநாட்டில் வலியுறுத்தல்

மனநலம் குன்றியவர்களுக்கு வேலை வாய்ப்பு: மாநாட்டில் வலியுறுத்தல்

மனநலம் குன்றியவர்களுக்கு வேலை வாய்ப்பு: மாநாட்டில் வலியுறுத்தல்


UPDATED : அக் 07, 2008 12:00 AM

ADDED : ஜன 01, 1970 05:30 AM

Follow on GoogleFavourite on Google

UPDATED : அக் 07, 2008 12:00 AM ADDED : ஜன 01, 1970 05:30 AM


Follow on Google
அ நிறம் | அளவு


கோவை:
‘ஊனமுற்றோரைப் போல் மனநலம் குன்றியவர்களுக்கும் அரசு, தனியார் நிறுவனங்களில் வேலை வாய்ப்புகளை ஒதுக்க வேண்டும்’ என்ற பரிந்துரையை, மத்திய, மாநில அரசுகளுக்கு அனுப்புவது என, கோவையில் நிறைவு பெற்ற இந்திய மனநல மருத்துவர் சங்க மாநாட்டில் முடிவு செய்யப்பட்டது.
இந்திய மனநல மருத்துவர் சங்கத்தின் தென்மண்டல மாநாடு, கோவை வேளாண் பல்கலை அரங்கில் நடந்தது.
அக்., 3ல் துவங்கிய மாநாடு 6ம் தேதி நிறைவு பெற்றது. தமிழகம், கேரளா, ஆந்திரா, கர்நாடகா, புதுச்சேரி உள்ளிட்ட மாநிலங்களை சேர்ந்த 320 மனநல மருத்துவர்கள் மாநாட்டில் பங்கேற்றனர்.
மாநாட்டின் அமைப்பு செயலாளர் டாக்டர் பிரதீப் மற்றும் சேர்மன் சீனிவாசன்  கூறியதாவது:
இந்த ஆண்டுக்கான மாநாட்டில், ‘பணியும் மனநலமும்’ என்ற தலைப்பு, முக்கிய விவாதப் பொருளாக எடுத்துக் கொள்ளப்பட்டது. வேலையின் மூலம் மட்டுமே ஒருவர் மற்றவர்களை ஏற்றுக் கொள்ளவும், மதிக்கவும் கற்கிறார். தன்மதிப்பு என்பதின் அடிப்படை, வேலை மூலம்தான் கிடைக்கிறது. ஆக்கபூர்வமான மனநிலையை ஒருவர் அடையவும், அந்த மனநிலையை தொடர்ந்து காப்பதற்கும் பணியிடம் முக்கிய பங்கு வகிக்கிறது.
உடல் ஊனமுற்றோர் சட்டம் 1995ல், சிறப்பு வேலை வாய்ப்புகளுக்கான விதிமுறைகள் வகுக்கப்பட்டுள்ளன. ஆனால், அந்த சட்டம் உடல் ஊனமுற்றோரை மட்டுமே மையமாக கொண்டுள்ளது. ஒருமுறை மனநலம் பாதிக்கப்பட்டிருந்தாலும், அவர்களை எந்த நிறுவனமும் உற்பத்திப் பணியில் ஏற்க முன்வருவதில்லை. மனநலம் பாதிக்கப்பட்டவர்களால் கூட பிறருக்கு தொந்தரவு தராமல் பல பணிகளை சிறப்பாக செய்ய முடியும்.
ஊனமுற்றோருக்கு ஒதுக்கீடு உள்ளது போல் மனநிலை பாதிக்கப்பட்டவர்களுக்கும் அரசு, தனியார் நிறுவனங்களில் வேலை வாய்ப்புகள் வழங்க வேண்டும். மனநிலை பாதிக்கப்பட்டவர்களுக்கு எந்த மாதிரியான வேலைகள் வழங்கலாம் என்பது குறித்த ஒரு பட்டியல் தயாரித்து, அதன்படி வேலைகள் வழங்கக் கோரி மத்திய, மாநில அரசுகளுக்கு பரிந்துரை செய்யவுள்ளோம்.
முன்னணி தொழில் நிறுவனங்களுக்கும் இதற்கான பரிந்துரைகளை அனுப்பவுள்ளோம். இவர்களுக்கான வேலை நேரங்களையும் சம்பளத்தையும் குறைத்து வழங்கலாம். பிறரைப் போல் மனநலம் குன்றியவர்களை பொது வாழ்வில் இணைக்கவும், அவர்களுக்கான உரிமைகளை மீட்டுத் தரவும் இந்த பரிந்துரைகள் உதவும் என நம்புகிறோம். இவ்வாறு, டாக்டர் பிரதீப் மற்றும் டாக்டர் சீனிவாசன் தெரிவித்தனர்.

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us