தினமலர்
சினிமா
டிவி
Podcast
iPaper
கோயில்கள்
புத்தகங்கள்
Subscription
திருக்குறள்
கடல் தாமரை
Dinamalar Logo

 

/செய்திகள்/கல்விமலர்/செய்திகள்/ஆசிரியர்கள் தகுதி பற்றி இன்ஜி., கல்லூரிகளில் ஆய்வு

ஆசிரியர்கள் தகுதி பற்றி இன்ஜி., கல்லூரிகளில் ஆய்வு

ஆசிரியர்கள் தகுதி பற்றி இன்ஜி., கல்லூரிகளில் ஆய்வு


UPDATED : அக் 15, 2008 12:00 AM

ADDED : ஜன 01, 1970 05:30 AM

Follow on GoogleFavourite on Google

UPDATED : அக் 15, 2008 12:00 AM ADDED : ஜன 01, 1970 05:30 AM


Follow on Google
அ நிறம் | அளவு

கோவை: “அண்ணா பல்கலைகழகத்தின் கட்டுப்பாட்டில் உள்ள இன்ஜி., கல்லூரிகளில் தகுதியான ஆசிரியர்கள் பற்றிய ஆய்வு அடுத்த மாதம் துவங்குகிறது,” என துணை வேந்தர் ராதாகிருஷ்ணன் தெரிவித்தார்.
கோவையில் இன்ஜினியரிங் கல்லூரிகளுக்கான கருத்துப்பட்டறை நடந்தது. ‘விப்ரோ அறக்கட்டளை மிஷன் 10 எக்ஸ்’ சார்பில், அண்ணா பல்கலையுடன் இணைந்து இதை நடத்தியது.
அண்ணா பல்கலை துணை வேந்தர் ராதாகிருஷ்ணன் பேசியதாவது:
வேலை நிறுவனங்களை தேடி கல்லூரிகள் சென்ற காலம் போய் விட்டது. தற்போது, கல்வி நிறுவனங்களை தேடி தொழில் நிறுவனங்கள் வருகிற நிலை உருவாகியுள்ளது. ஆசிரியர்கள் மாணவர்களுக்கு நம்பிக்கை அளிப்பவர்களாக இருக்க வேண்டும்.
முன் மாதிரி அறிவுத்திறனை பயன்படுத்துகிற மாணவர்களை ஆசிரியர்கள் உருவாக்க வேண்டும். அண்ணா பல்கலை கட்டுப்பாட்டில் உள்ள இன்ஜினியரிங் கல்லூரிகளில், பல்கலை விதிகளின் படி ஆசிரியர்கள் நியமிக்கப்பட்டுள்ளனரா என்பதை கண்டறிய, அடுத்த மாதம் முதல், ஆய்வு நடத்தப்படும்.
பல்கலைக்கழகமாக இருந்தாலும், அதில் உள்ள ஆசிரியர்கள் மற்றும் கல்லூரி பேராசிரியர்களாக இருந்தா<லும், தகுதியானவர்கள் மட்டுமே இருக்க வேண்டும். அனைத்து தொழில் நிறுவனங்களும் ஏற்றுக் கொள்ளும் வகையில் வேலை வாய்ப்பு திறனை பெறுகிற மாணவர்களை உருவாக்கும் வகையில் அண்ணா பல்கலை பாடத்திட்டங்கள் அமல்படுத்தப்படும். இவ்வாறு அவர் பேசினார்.
சென்னை அண்ணா பல்கலைகழகத்தை சேர்ந்த சி.யு.ஐ.சி., இயக்குநர் ரவிச்சந்திரன் வரவேற்றார்.

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us