தினமலர்
சினிமா
டிவி
Podcast
iPaper
கோயில்கள்
புத்தகங்கள்
Subscription
திருக்குறள்
கடல் தாமரை
Dinamalar Logo

 

/செய்திகள்/கல்விமலர்/செய்திகள்/இன்று கைகள் கழுவும் தினம்: 7 கட்டளைகளை பின்பற்ற அறிவுறுத்தல்

இன்று கைகள் கழுவும் தினம்: 7 கட்டளைகளை பின்பற்ற அறிவுறுத்தல்

இன்று கைகள் கழுவும் தினம்: 7 கட்டளைகளை பின்பற்ற அறிவுறுத்தல்


UPDATED : அக் 15, 2008 12:00 AM

ADDED : ஜன 01, 1970 05:30 AM

Follow on GoogleFavourite on Google

UPDATED : அக் 15, 2008 12:00 AM ADDED : ஜன 01, 1970 05:30 AM


Follow on Google
அ நிறம் | அளவு


திண்டுக்கல்:
குழந்தைகள் சாப்பிடும் முன்பு கண்டிப்பாக சோப்பு தேய்த்து கைகளை கழுவ வேண்டும் என்பது உட்பட 7 கட்டளைகள் இன்று சர்வதேச கைகழுவும் தினத்தில் அறிவிக்கப்பட்டுள்ளது.
முழு சுகாதார இயக்க திட்ட செயல்பாட்டில் ஒன்றாக இன்று சர்வதேச கைகள் கழுவும் தினமாக அறிவிக்கப்பட்டுள்ளன. அனைத்து பள்ளி குழந்தைகளும், ஆசிரியர்களும், பள்ளிக்குழு உறுப்பினர்களும், மதிய உணவு சமையல்காரர்களும் 7 கட்டளைகளை கடைபிடிக்க வேண்டும்.


  • பள்ளியில் தண்ணீர் மற்றும் சுகாதார வசதிகள் உள்ளனவா என்பதை கணகாணிக்க குழந்தைகள் அடங்கிய ஒரு குழுவைத் தேர்ந்தெடுக்க வேண்டும்.

  • அடுத்த ஆண்டிற்கான சுகாதார செயல்களை திட்டமிட ஒரு சிறப்பு சந்திப்புக்கு ஏற்பாடு செய்ய வேண்டும்.

  • பள்ளி அறை மற்றும் வளாகத்தை சுத்தம் செய்ய வேண்டும்.

  • மதிய உணவுக்கு முன் அனைவரும் கைகளைச் சோப்பு போட்டுக் கழுவ வேண்டும்.

  • திறந்த வெளியில் மலம் கழிக்க மாட்டோம், கழிவறையை பயன்படுத்துவோம் என உறுதிமொழி எடுத்துக் கொள்ள வேண்டும்.

  • சாப்பிடுவதற்கு முன்பும், மலம் கழித்த பின்பும் கைகளை சோப்பு போட்டு கழுவும் பழக்கத்தை ஏற்படுத்திக் கொள்ள வேண்டும்.

  • சோப்பை பயன்படுத்திக் கைகளை கழுவுவது மற்றும் மலம் கழிக்க கழிவறைகளை பயன்படுத்துவது குறித்து விழிப்புணர்வை கிராம மக்களிடையே ஏற்படுத்த வேண்டும்.

சுத்தமான கைகளே ஆரோக்கியத்தின் அடையாளம் என்ற விழிப்புணர்வு கையேடு யுனிசெப் நிறுவனம் மூலம் வழங்கப்பட்டுள்ளது. பள்ளி மாணவ, மாணவிகள் பொதுமக்கள் பயன்படும் வகையில் பயன்படுத்த வேண்டும்.இவ்வாறு முழு சுகாதாரத்துறை அறிவித்துள்ளது.

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us