வேலூரில் அரசு சட்டக் கல்லூரி: ‘பார்’ கவுன்சில் கேள்வி
வேலூரில் அரசு சட்டக் கல்லூரி: ‘பார்’ கவுன்சில் கேள்வி
UPDATED : அக் 15, 2008 12:00 AM
ADDED : ஜன 01, 1970 05:30 AM
சென்னை: ஒப்புதல் பெறாமல் வேலூரில் அரசு சட்டக் கல்லூரி துவக்கப்படுவது குறித்து பார் கவுன்சில் கேள்வி எழுப்பியுள்ளது.
இதுகுறித்து தமிழக அரசின் சட்டத்துறைச் செயலர், அம்பேத்கர் சட்டப் பல்கலைக் கழக பதிவாளர் உள்ளிட்டோருக்கு இந்திய பார் கவுன்சில் செயலர் அனுப்பிய கடிதத்தில் கூறியிருப்பதாவது:
வேலூரில் அரசு சட்டக் கல்லூரி துவக்கப்படுவதாக எங்களின் கவனத்துக்கு கொண்டு வரப்பட்டது. பார் கவுன்சில் ஒப்புதல் பெறாமல் அரசு எப்படி இந்தக் கல்லூரியை துவக்குகிறது? கவுன்சில் விதிகளின்படி, எங்களிடம் ஒப்புதல் பெறப்பட வேண்டும். ஒப்புதல் பெறுவதற்காக நேரடி ஆய்வு செய்யக் கோரி அரசிடம் இருந்து இதுவரை எங்களுக்கு எந்த கடிதமும் வரவில்லை.
பார் கவுன்சிலின் அங்கீகாரம் இல்லாமல் எந்தக் கல்லூரியும் சட்டக் கல்வியை வழங்கினால் அது விதிமுறைகளை மீறுவதாகும். ஒப்புதல் பெறாமல் நடத்தப்படும் கல்லூரிகளில் சட்டப் படிப்பு முடித்தால் அதை வைத்து வக்கீலாக பதிவு செய்ய முடியாது.
எனவே, எங்களின் ஒப்புதல் பெறாமல் எப்படி இந்த சட்டக் கல்லூரி துவக்கப்படுகிறது என்பதை தெரியப்படுத்த வேண்டும். இவ்வாறு அந்தக் கடிதத்தில் கூறப்பட்டுள்ளது.
