UPDATED : அக் 16, 2008 12:00 AM
ADDED : ஜன 01, 1970 05:30 AM
அ நிறம் | அளவு
ராமேஸ்வரம்: முன்னாள் ஜனாதிபதி அப்துல் கலாம் படித்த பள்ளியில் அவரது பிறந்த நாள் விழா கொண்டாடப்பட்டது.
முன்னாள் ஜனாதிபதி அப்துல் கலாமின் 77வது பிறந்த நாள் விழா அவர் படித்த ராமேஸ்வரம் வர்த்தகன் தெருவில் உள்ள ஊராட்சி நடுநிலைப் பள்ளியில் அக். 15ம் தேதி கொண்டாடப்பட்டது. சென்னையில் இருந்து வந்த அப்துல் கலாமின் நண்பர்கள் விஜயராகவன் மற்றும் முரளி, பள்ளி நூலகத்துக்கு புத்தக அலமாரி வழங்கினர்.
பகவத்கீதை, பைபிள், குரான், திருக்குறள் புத்தகங்களை அப்துல் கலாமின் சகோதரர் முகமது முத்து மீரான் மரைக்காயரிடம் வழங்கினர். பள்ளி தலைமை ஆசிரியை உமா தேவி, கிராம கல்விக்குழுத் தலைவர் பாலமுருகன், பெட்காட் மாவட்ட ஒருங்கிணைப்பாளர் ஜெயகாந்தன் கலந்து கொண்டனர்.
