மருத்துவ கவுன்சிலுக்கு தேர்தல்: தமிழக அரசுக்கு ஐகோர்ட் நோட்டீஸ்
மருத்துவ கவுன்சிலுக்கு தேர்தல்: தமிழக அரசுக்கு ஐகோர்ட் நோட்டீஸ்
UPDATED : அக் 17, 2008 12:00 AM
ADDED : ஜன 01, 1970 05:30 AM
சென்னை: தமிழ்நாடு பல் மருத்துவக் கவுன்சிலுக்கு தேர்தல் நடத்தக் கோரி சென்னை ஐகோர்ட்டில் மனு தாக்கல் செய்யப்பட்டுள்ளது. இதற்கு பதிலளிக்க தமிழக அரசுக்கு நோட்டீஸ் அனுப்ப உத்தரவிடப்பட்டுள்ளது.
சென்னையைச் சேர்ந்த பல் மருத்துவர்கள் துக்காராம், முருகேசன், தென்காசியைச் சேர்ந்த டாக்டர் கதிரேசன் தாக்கல் செய்த மனு:
பல் மருத்துச் சட்டப்படி, கவுன்சிலுக்கு தேர்ந்தெடுக்கப்படும் நிர்வாகிகள் ஐந்து ஆண்டுகள் பதவி வகிக்கலாம். 1991ம் ஆண்டு பல் மருத்துவக் கவுன்சிலுக்கு தேர்தல் நடந்தது. ’1996ம் ஆண்டு இவர்களின் பதவிக்காலம் முடிந்தது. அதற்கு முன்பே, தேர்தலை நடத்த நடவடிக்கை எடுத்திருக்க வேண்டும். ஆனால், நடவடிக்கை எடுக்கவில்லை.
கடந்த 1991ம் ஆண்டு நடந்த தேர்தலில் தேர்ந்தெடுக்கப்பட்டவர்களின் பதவிக்காலம் முடிந்த பிறகும், தொடர்ந்து அவர்கள் பதவியில் உள்ளனர். 2001ம் ஆண்டு தேர்தலை அரசு ரத்து செய்துவிட்டது. அரசின் உத்தரவுக்கு பிறகும் புதிதாக தேர்தல் நடத்தவில்லை.
தமிழ்நாடு பல் மருத்துவக் கவுன்சில் பதிவாளரை தேர்தல் அதிகாரியாக செயல்பட அனுமதித்தால் நியாயமான தேர்தல் நடக்காது. பல் மருத்துவக் கவுன்சில் தேர்தலை நடத்துவற்கு தேர்தல் அதிகாரியாக பதிவாளரை நியமிக்க தடை விதிக்க வேண்டும்.
சுகாதாரத் துறை சார்பில் ஒரு அதிகாரியை நியமித்து தமிழ்நாடு மருத்துவ கவுன்சிலுக்கு உடனடியாக தேர்தல் நடத்த வேண்டும். இவ்வாறு மனுவில் கூறப்பட்டுள்ளது மனுவுக்கு பதிலளிக்க இந்திய மருத்துவக் கவுன்சில், தமிழக அரசுக்கு நோட்டீஸ் அனுப்ப நீதிபதி சுகுணா உத்தரவிட்டார்.
