தினமலர்
சினிமா
டிவி
Podcast
iPaper
கோயில்கள்
புத்தகங்கள்
Subscription
திருக்குறள்
கடல் தாமரை
Dinamalar Logo

 

/செய்திகள்/கல்விமலர்/செய்திகள்/60 வயதை கடந்தாலும் வேலைவாய்ப்பு அலுவலகத்தில் பதிவு இருக்குமாம்!

60 வயதை கடந்தாலும் வேலைவாய்ப்பு அலுவலகத்தில் பதிவு இருக்குமாம்!

60 வயதை கடந்தாலும் வேலைவாய்ப்பு அலுவலகத்தில் பதிவு இருக்குமாம்!


UPDATED : அக் 17, 2008 12:00 AM

ADDED : ஜன 01, 1970 05:30 AM

Follow on GoogleFavourite on Google

UPDATED : அக் 17, 2008 12:00 AM ADDED : ஜன 01, 1970 05:30 AM


Follow on Google
அ நிறம் | அளவு


மதுரை:
வேலைவாய்ப்பு அலுவலகங்களை ரூ. 2.90 கோடி மதிப்பில் ‘நெட்வொர்க்’ மூலம் இணைக்கப்பட உள்ளதாக வேலைவாய்ப்புத்துறை கமிஷனர் ஏ.எஸ்.ஜீவரத்தினம் கூறினார்.
மதுரையில் அவர் நிருபர்களிடம் கூறியதாவது: தமிழகத்தில் வேலைவாய்ப்பு அலுவலகங்களில் 52 லட்சம் பேர் பதிவு செய்துள்ளனர். 60வயதை கடந்தவரின் பெயரும் ரத்து செய்யப்படுவதில்லை என்பதால் இந்த எண்ணிக்கை உள்ளது. ஒரு காலாண்டுக்கு 3.55 லட்சம் வேலைவாய்ப்பற்றோருக்கு உதவித் தொகை வழங்கப்படுகிறது.
பட்டதாரி ஆசிரியர்கள் பதிவுமூப்பு பட்டியலில் புதிய இடைச் செருகல் ஏற்பட்டுள்ளது குறித்து கவனத்திற்கு வந்துள்ளது. மாநில அளவில் 18 ஆயிரம் பேரின் பட்டியல் தயாரிக்கும்போது குறைந்தளவில் விடுபடுவதற்கு வாய்ப்புகள் உள்ளன. பதிவுமூப்பு சரிபார்க்கப்படும்போது பாட குறியீடு தவறாக எழுதியிருந்தாலும் விடுபட வாய்ப்புள்ளது. அவை சரிசெய்யப்பட்டு பதிவுமூப்பு உள்ளவர்களுக்கு நியமனம் கிடைக்கவும் வாய்ப்புள்ளது.
இதுபோன்ற குறைபாடுகளை தவிர்க்க வரும் காலங்களில் வேலைவாய்ப்பு அலுவலகங்களில் பட்டியலை கூடுதல் காலஅவகாசத்தில் நாங்களே சரிபார்த்து அனுப்பலாமா என பரிசீலித்து வருகிறோம்.
வேலைவாய்ப்பு அலுவலகங்களை ‘நெட்வொர்க்’ மூலம் இணைப்பதற்கு அரசு ரூ. 2.90 கோடி ஒதுக்கீடு செய்துள்ளது. எல்காட் மூலம் ஒருஆண்டில் இப்பணிகள் நடைபெறும் என எதிர்பார்கிறோம். அதன் பின்னர் பதிவுமூப்பு பிரச்னை வரவாய்ப்பில்லை. வேலைவாய்ப்பு அலுவலகம் மூலம் குறுகிய கால திறன்எய்தும் பயிற்சிகள் அளிக்கப்படுகின்றன. இதுவரை 13 ஆயிரத்து 818 பேருக்கு பயிற்சி கொடுத்துள்ளோம்.
இதற்காக மாநில அரசு ரூ.8 கோடி ஒதுக்கீடு செய்துள்ளது. இதேபோல மத்திய அரசும் ‘ஸ்கில் டெவலட்மென்ட் இனிஷியேட்டிவ்’ என்ற திறன்பயிற்சி அளிக்க உள்ளது. இப்பயிற்சியில் பெறும் என்.சி.வி.டி., சான்றிதழ் மூலம் சுயவேலைவாய்ப்பு, வங்கிக் கடன், வேலைவாய்ப்புக்கான அங்கீகாரம் கிடைக்கும். இவ்வாறு அவர் கூறினார்.

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us