கம்பியில்லா இணையவழி தகவல் தொடர்பு வசதி: புதுச்சேரி பல்கலையில் அறிமுகம்
கம்பியில்லா இணையவழி தகவல் தொடர்பு வசதி: புதுச்சேரி பல்கலையில் அறிமுகம்
UPDATED : அக் 17, 2008 12:00 AM
ADDED : ஜன 01, 1970 05:30 AM
புதுச்சேரி பல்கலைக் கழகத்தில் பி.எஸ்.என்.எல்., நிறுவனத்தின் கூட்டு முயற்சியோடு அதிநவீன தகவல் பரிமாற்ற வசதி நிறுவப்பட்டு வருகிறது. இந்த ஒருங்கிணைந்த தகவல் தொடர்பு மையம் எதிர் - எதிர்முனை தொடர்பு கொண்டது.
இந்த வசதி புதுச்சேரி பல்கலைக் கழகத்தின் காரைக்கால், அந்தமான் மையங்களிலும் அமைக்கப்படுகிறது. இதன்மூலம் புதுச்சேரி பல்கலைக் கழகத்தின் ஒரு துறையில் நடக்கும் செயல்பாடுகளை அத்துறைக்கு செல்லாமலே வேறு ஒரு துறையில் இருந்து இணைய வழியில் காணலாம். இந்த ஒருங்கிணைந்த தகவல் பரிமாற்று முறை திட்டம் இரண்டு கோடி ரூபாய் செலவில் நிறுவப்பட்டு வருகிறது.
இந்த ஒருங்கிணைந்த தகவல் பரிமாற்ற தொடர்பு திட்டங்களை நிறுவுவதற்கான ஒப்பந்தம் அக். 16ம் தேதி நடந்தது. துணைவேந்தர் தரீன், பி.எஸ்.என்.எல்., பொது மேலாளர் மார்ஷல் அந்தோணி லியோ முன்னிலையில் பல்கலைக்கழக பதிவாளர் லோகநாதன், துணை பொது மேலாளர் ராபர்ட் ரவி ஒப்பந்தத்தில் கையெழுத்திட்டனர்.
இத்திட்டத்தின் மூலம் புதுச்சேரி பல்கலைக் கழகம் அனைத்து அதிநவீன தகவல் தொடர்பு, ஐ.பி. தொலைபேசி, கம்பியில்லா இன்டர்நெட் சேவை வசதி கொண்ட முதல் பல்கலைக் கழகமாக திகழும்.
