சைக்கிள் இல்லாத ஏழை மாணவன் சைக்கிள் போட்டியில் முதலிடம்
சைக்கிள் இல்லாத ஏழை மாணவன் சைக்கிள் போட்டியில் முதலிடம்
UPDATED : அக் 18, 2008 12:00 AM
ADDED : ஜன 01, 1970 05:30 AM
காரமடை: சைக்கிள் வாங்க முடியாத ஏழை மாணவன், மாவட்ட அளவிலான சைக்கிள் போட்டியில் முதலிடம் பெற்று மாநில அணிக்கு தேர்வாகியுள்ளான்.
காரமடை அருகே உள்ள சீளியூர் துரைசாமி கவுடர் மேல்நிலைப் பள்ளியில், பத்தாம் வகுப்பு படிக்கும் மாணவன் பிரபு (16). நரிக்குறவர் இனத்தைச் சேர்ந்த ஏழ்மை நிலையில் இருக்கும் இம்மாணவன், சைக்கிள் வாங்க முடியாமல், அரசு வழங்கிய இலவச சைக்கிளை நண்பர்களிடம் பெற்று பயிற்சி பெற்றான். எஸ்.ஜி.எப்., நடத்திய மாநில அளவிலான சைக்கிள் போட்டியில் 17 வயதுக்கு உட்பட்டோர் பிரிவில் முதலிடம் பிடித்து, தமிழக அணிக்கு தேர்வாகியுள்ளான்.
பள்ளி தலைமையாசிரியர், ஆசிரியர்கள் கூறுகையில், ‘பிரபுவிடம் திறமை உள்ளது. வெளிப்படுத்த வாய்ப்பு குறைவாக உள்ளது. ஷூ, சைக்கிள் இல்லாமலே பயிற்சி பெற்று மாநில அளவிலான போட்டியில் வென்று தமிழக அணிக்கு தேர்வாகியிருப்பது மகிழ்ச்சி அளிக்கிறது. பள்ளி சார்பில் முடிந்த உதவிகளை செய்து வருகிறோம். சைக்கிள் போட்டிக்கு தேவையான உதவிகள் கிடைத்தால் தேசிய அளவிலான போட்டிகளில் பங்கேற்று வெல்ல வாய்ப்பு கிடைக்கும். ஒலிம்பிக் போட்டிகளிலும் இந்தியா சார்பில் வெற்றி பெறுவான்’ என்றனர்.
