தினமலர்
சினிமா
டிவி
Podcast
iPaper
கோயில்கள்
புத்தகங்கள்
Subscription
திருக்குறள்
கடல் தாமரை
Dinamalar Logo

 

/செய்திகள்/கல்விமலர்/செய்திகள்/6ம் வகுப்பு தேர்ச்சி பெற்றாலே தட்டச்சு தேர்வு எழுதலாம்

6ம் வகுப்பு தேர்ச்சி பெற்றாலே தட்டச்சு தேர்வு எழுதலாம்

6ம் வகுப்பு தேர்ச்சி பெற்றாலே தட்டச்சு தேர்வு எழுதலாம்


UPDATED : அக் 21, 2008 12:00 AM

ADDED : ஜன 01, 1970 05:30 AM

Follow on GoogleFavourite on Google

UPDATED : அக் 21, 2008 12:00 AM ADDED : ஜன 01, 1970 05:30 AM


Follow on Google
அ நிறம் | அளவு


சென்னை:
தட்டச்சு இளநிலை தேர்வில், கலந்துகொள்ள 8ம் வகுப்பு தேர்ச்சி பெற வேண்டும் என்பதற்கு மாறாக, 6ம் வகுப்பு தேர்ச்சி பெற்ற மாணவர்களுக்கு புதிதாக புகுமுக இளநிலை தட்டச்சு தேர்வு நடத்த அரசு உத்தரவிட்டுள்ளது.
துரிதமாகவும், சரளமாகவும் கம்ப்யூட்டர் இயக்க மாணவர்களுக்கு இந்தத் தேர்வு நடத்தப்படுகிறது. தட்டச்சு இளநிலை தேர்வில், கலந்துகொள்ள 8ம் வகுப்பு தேர்ச்சி பெற்றிருந்தால் போதுமானது என 2001ம் ஆண்டு, தொழில் நுட்பக் கல்வி ஆணையம் உத்தரவிட்டது. இதை நடைமுறைப்படுத்திய பின், தட்டச்சு இளநிலைக்கு அதிக வரவேற்பு இருந்தது.
இதனால், தமிழகத்தில் தட்டச்சு தேர்வுக்கு பிற மாநிலங்களை விட, ஐந்து மடங்கு அதிகமாக தேர்வு எழுதுகின்றனர். தற்போது, பள்ளிகளில் இளவயதில், கணினி பயிற்சிக்கு மாணவர்கள் செல்கின்றனர். அவர்களுக்கு தட்டச்சு விசைப் பலகை (டைப்ரைட்டர்  கீ போர்டு ஆபரேஷன்) பயிற்சி தந்தால், கணினியை வேகமாகவும், திறமையாகவும் இயக்கும் ஆற்றலை பெறுவர்.
அதை ஊக்குவிக்க, 6ம் வகுப்பு தேர்ச்சி பெற்ற மாணவர்களுக்கென தேர்வு நடத்த திட்டமிடப்பட்டது. புதிதாக புகுமுக இளநிலை (ப்ரீ ஜூனியர் கிரேடு) என்ற தட்டச்சு பிரிவை ஆரம்பித்து, இத்தேர்வை நடத்தினால், அதை மாணவ, மாணவிகள் பெரிதும் பயன்படுத்திக் கொள்வர்.
கல்விச் சுமை குறைவாக இருக்கும் பருவத்தில் தட்டச்சு பயிற்சி பெறுவது, கணினி பயிற்சிக்கு பெரிதும் உதவியாக இருக்கும். இதை, பரிசீலித்த தமிழக அரசின் உயர்கல்வித் துறை, புகுமுக இளநிலை என்ற தட்டச்சு பிரிவை ஆரம்பிக்கவும், அதற்கான தேர்வு நடத்தவும் தொழில்நுட்ப கல்வி ஆணையருக்கு அதிகாரம் வழங்கி அரசாணை பிறப்பித்துள்ளது.
அதில் கூறப்பட்டுள்ளதாவது:
இப்பிரிவில், சேர 6ம் வகுப்பு தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும். புகுமுக இளநிலை தட்டச்சு தேர்வுக்கு, வேகம் நிமிடத்துக்கு 25 வார்த்தைகள் என்ற அளவில் 10 நிமிடங்களில் ஒரு பாராவில் 250 வார்த்தைகள் (1,250 எழுத்துக்கள்) என்ற கணக்கில் நடத்தப்படும். ஜூனியர் கிரேடு தேர்வில் உள்ளது போல இதற்கு இரண்டாம் தாள் கிடையாது.
தகுதியுள்ள ஆசிரியர்களிடம் முறையாக, பயிற்சி பெறுவதற்காக, தட்டச்சு தேர்வு எழுத விண்ணப்பிக் கும் மாணவர்கள் குறைந்தபட்சம் மூன்று மாதங்களுக்கு அரசு அங்கீகாரம் பெற்ற வணிகவியல் மையங்களில் பயிற்சி பெற்றிருக்க வேண்டும். புதுமுக இளநிலை தட்டச்சு தேர்வு வருடத்தில், ஒரு முறை நடத்தப்படும்.
இந்த நிபந்தனைகளின் அடிப்படையில் 6ம் வகுப்பு தேர்ச்சி பெற்ற மாணவர்களுக்கு தட்டச்சு தேர்வு நடத்த தொழில்நுட்பக் கல்வி ஆணையருக்கு அதிகாரம் வழங்கப்பட்டுள்ளது.

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us