தினமலர்
சினிமா
டிவி
Podcast
iPaper
கோயில்கள்
புத்தகங்கள்
Subscription
திருக்குறள்
கடல் தாமரை
Dinamalar Logo

 

/செய்திகள்/கல்விமலர்/செய்திகள்/கல்வித் துறையில் சீர்திருத்தம்: அதிகாரங்கள் பகிர்ந்தளிப்பு

கல்வித் துறையில் சீர்திருத்தம்: அதிகாரங்கள் பகிர்ந்தளிப்பு

கல்வித் துறையில் சீர்திருத்தம்: அதிகாரங்கள் பகிர்ந்தளிப்பு


UPDATED : அக் 23, 2008 12:00 AM

ADDED : ஜன 01, 1970 05:30 AM

Follow on GoogleFavourite on Google

UPDATED : அக் 23, 2008 12:00 AM ADDED : ஜன 01, 1970 05:30 AM


Follow on Google
அ நிறம் | அளவு


உடுமலை:
தொடக்க கல்வித்துறையின் நிர்வாக நடவடிக்கைகளை சீர்திருத்தம் செய்வதற்காக, உயர் மற்றும் கீழ்நிலை அலுவலர்களுக்கு அதிகாரங்கள் பகிர்ந்தளித்து தமிழக அரசு உத்தரவிட்டுள்ளது.
அரசு வெளியிட்டுள்ள உத்தரவில் கூறியிருப்பதாவது:
தொடக்க கல்வி இயக்குனரிடமிருந்து, மாவட்ட தொடக்க கல்வி அலுவலருக்கு ஒப்படைக்கப்படும் அதிகாரம்:
* நடுநிலைப் பள்ளித் தலைமை ஆசிரியர்களுக்கு தேர்வு நிலை அல்லது சிறப்பு நிலை தகுதி, மாவட்டத் தொடக்க கல்வி அலுவலர்களால் வழங்கப்பட்டு வருகிறது. இதேபோல், தொடக்கக் கல்வி உதவி அல்லது கூடுதல் உதவி அலுவலர்களுக்கும் மாவட்டத் தொடக்க கல்வி அலுவலரே தேர்வு நிலை அல்லது சிறப்பு நிலை வழங்கலாம்.
* தொடக்க கல்வி உதவி மற்றும் கூடுதல் அலுவலர்கள், அஞ்சல் வழிக் கல்வி மூலம் மேற்படிப்பு பயில முன் அனுமதி வழங்கப்படும்.
* அரசுப் பணியாளர் தேர்வாணையத்தால் நடத்தப்படும் தேர்வுகளில், கண்காணிப்பாளராகச் செல்ல தொடக்க கல்வி உதவி அலுவலர்களுக்கு அனுமதிக்கப்படும்.
மாவட்ட கல்வி அலுவலரிடமிருந்து மாவட்டத் தொடக்க கல்வி அலுவலருக்கு அளிக்கப்படும் அதிகாரம்:
*தொடக்க மற்றும் நடுநிலைப் பள்ளி ஆசிரியர்கள் சார்பான வெளி மாநில பல்கலைக்கழக பட்ட சான்றுகள் மதிப்பீடு செய்யலாம்.
மாவட்டத்தொடக்க கல்வி அலுவரிடமிருந்து தொடக்க கல்வி உதவி அலுவலருக்கு ஒப்படைக்கப்படும் அதிகாரங்கள்:
* ஊராட்சி ஒன்றியங்களில் உள்ள ஆசிரியர்கள் அஞ்சல் வழிக் கல்வி மூலம் மேற்படிப்பு மேற்கொள்ள முன் அனுமதி வழங்கப்படும்.
* அரசுப் பள்ளிகளில் பணியாற்றும் ஆசிரியர்கள் பணிப்பதிவேடுகளை பராமரிக்கலாம்.
* ஒன்று முதல் ஐந்தாம் வகுப்பு வரை தனி படிப்பு மூலம் பயின்று, பள்ளியில் சேர விண்ணப்பிக்கும் மாணவர்களுக்கு சேர்க்கை வழங்கும் உரிமை அளிக்கப்படுகிறது.
* ஒன்றியங்களில் பணியாற்றும் ஆசிரியர்களை, ஆசிரியர் தேவையுள்ள பள்ளிகளுக்கு மாற்றுப்பணி அமர்த்தலாம்.
* ஒன்று முதல் எட்டாம் வகுப்பு வரை பயின்ற மாணவர்களின் தேர்ச்சிப் பட்டியலுக்கு ஒப்புதல் வழங்கலாம்.
தொடக்க கல்வி இயக்குநரிடமிருந்து தற்போது இணை இயக்குனருக்கு ஒப்படைக்கப்படும் அதிகாரங்கள்:
*தொடக்க கல்வித் துறையில் பணியாற்றும் நடுநிலைப் பள்ளித் தலைமை ஆசிரியர்கள் உள்ளிட்ட அனைத்து ஆசிரியர்கள் சார்பாகவும், அசையும் மற்றும் அசையா சொத்து வாங்குவதற்கான அனுமதி வழங்கும் அதிகாரம், துறைத் தலைவரான தொடக்க கல்வி இயக்குனரிடமிருந்து இரண்டாம் நிலை அலுவலரான இணை இயக்குனருக்கு ஒப்படைக்கப்படுகிறது.
இவ்வாறு  அரசு உத்தரவில் கூறப்பட்டுள்ளது.

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us