தினமலர்
சினிமா
டிவி
Podcast
iPaper
கோயில்கள்
புத்தகங்கள்
Subscription
திருக்குறள்
கடல் தாமரை
Dinamalar Logo

 

/செய்திகள்/கல்விமலர்/செய்திகள்/இன்ஜி., சீட் வாங்கி தருவதாக 1.10 லட்சம் மோசடி

இன்ஜி., சீட் வாங்கி தருவதாக 1.10 லட்சம் மோசடி

இன்ஜி., சீட் வாங்கி தருவதாக 1.10 லட்சம் மோசடி


UPDATED : அக் 23, 2008 12:00 AM

ADDED : ஜன 01, 1970 05:30 AM

Follow on GoogleFavourite on Google

UPDATED : அக் 23, 2008 12:00 AM ADDED : ஜன 01, 1970 05:30 AM


Follow on Google
அ நிறம் | அளவு


சென்னை:
தனியார் இன்ஜினியரிங் கல்லூரியில் சீட்டு வாங்கித் தருவதாக மோசடி செய்த நபர் மீது, பாதிக்கப்பட்ட பெண் ஒருவர் கமிஷனர் ஜாங்கிட்டிடம் புகார் கொடுத்தார்.
பொழிச்சலூர், எம்.ஜி.ஆர்., அவென்யூ, காரனேஸ்வரி நகரை சேர்ந்த சகாதேவன் என்பவரின் மனைவி மகாலட்சுமி.
இவர் சென்னை புறநகர் போலீஸ் கமிஷனர் ஜாங் கிட்டிடம் புகார் மனு ஒன்று கொடுத்தார்.
அதில், ‘எனது மகள் பவானி என்பவருக்கு, தண்டலம் பகுதியில் உள்ள ஒரு தனியார் இன்ஜினியரிங் கல்லூரியில் சீட் வாங்குவது தொடர்பாக, நண்பர் உதவியுடன் அண்ணா நகர், கோல்டன் காலனியைச் சேர்ந்த நாதன் என்பவரை சந்திதோம்.
அவர் அமெரிக்கன் இன்டர்நேஷனல் மெடிக்கல் யுனிவர்சிட்டியில் வேலை பார்ப்பதாக அறிமுகப்படுத்தி கொண்டார். ஒரு லட்சத்து 10 ஆயிரம் ரூபாய் பணம் கொடுத்தால் நிச்சயம் சீட் வாங்கித் தருவதாக கூறினார். அதன் பேரில் அவரிடம் நான் பணம் கொடுத்தேன்.
எனது மகளுக்கு கல்லூரியில் சீட்டும் வாங்கி கொடுக்கவில்லை. பணமும் திருப்பிக் கொடுக்கவில்லை. எனது பணத்தை திரும்பப் பெற்று தரவேண்டும்,’ என்று கூறியிருந்தார். இது குறித்து உரிய நடவடிக்கை எடுக்க கமிஷனர் ஜாங்கிட் சம்பந்தப்பட்ட போலீசாருக்கு உத்தரவிட்டார்.

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us