தினமலர்
சினிமா
டிவி
Podcast
iPaper
கோயில்கள்
புத்தகங்கள்
Subscription
திருக்குறள்
கடல் தாமரை
Dinamalar Logo

 

/செய்திகள்/கல்விமலர்/செய்திகள்/சந்திராயன் செயற்கைக்கோள் நவ.,15 முதல் தகவல் அனுப்பும்!

சந்திராயன் செயற்கைக்கோள் நவ.,15 முதல் தகவல் அனுப்பும்!

சந்திராயன் செயற்கைக்கோள் நவ.,15 முதல் தகவல் அனுப்பும்!


UPDATED : அக் 23, 2008 12:00 AM

ADDED : ஜன 01, 1970 05:30 AM

Follow on GoogleFavourite on Google

UPDATED : அக் 23, 2008 12:00 AM ADDED : ஜன 01, 1970 05:30 AM


Follow on Google
அ நிறம் | அளவு


சென்னை:
“சந்திரயான் - 1 செயற்கைக்கோள் சேகரிக்கும் தகவல்கள், நவம்பர் 15ம் தேதி முதல் கிடைக்கத் துவங்கும்,” என இஸ்ரோ விஞ்ஞானிகள் தெரிவித்தனர்.
ஸ்ரீஹரிகோட்டாவில் நிருபர்களுக்கு பேட்டியளித்த, ‘இஸ்ரோ’ தலைவர் மாதவன் நாயர், சந்திரயான் - 1 திட்ட இயக்குனர் மயில்சாமி அண்ணாதுரை மற்றும் விஞ்ஞானிகள் கூறியதாவது:
சந்திரயான் - 1, அக். 22ம் தேதி தனது பயணத்தை துவக்கியிருக்கிறது. இத்திட்டத்தில் முக்கியமான ஒரு பகுதி வெற்றிகரமாக செயல்படுத்தப்பட்டுள்ளது. திட்டமிட்டபடி காலை 6.22 மணிக்கு விண்ணில் செலுத்தப்பட்டது.
செயற்கைக்கோள் ஆரோக்கியமாக செயல்பட்டு வருகிறது. செயற்கைக் கோளிலிருந்து தரைக் கட்டுப்பாட்டு அலுவலகங்களுக்கு சிக்னல்கள் கிடைத்துள்ளன. நிலவுக்கான தனது நீண்ட பயணத்தை சந்திரயான் - 1 துவக்கியிருக்கிறது.
செயற்கைக்கோளில் உள்ள இயந்திரங்கள் இயக்கப்பட்டு, நிலவின் சுற்றுப்பாதைக்கு எடுத்துச் செல்லப்படும். பூமியிலிருந்து நான்கு லட்சம் கி.மீ., தொலைவில் உள்ள நிலவை அடைவதற்காக, சந்திரயான் - 1 செயற்கைக்கோள், அதை விட அதிக தொலைவு பயணம் செய்யவுள்ளது. இது புதிய முயற்சி.
எங்களுக்கு இதுவரை தெரியாத பல விஷயங்களை எதிர்கொள்ள வேண்டியிருக்கும். நிலவின் ஈர்ப்பு திசையை பற்றி தெரியாது. சூரியன், இதர கிரகங்களின் குறுக்கீடுகள் இருக்கக்கூடும். இவற்றைக் கணக்கிட்டு, அதற்கேற்ப செயற்கைக் கோளை செயல்படவைக்க வேண்டும்.
கடந்த ஐந்து நாட்களாக கனமழை, இடி, மின்னல் என கடுமையான சோதனைகளை சந்திக்க வேண்டியிருந்தது. இதனால், அக். 21ம் தேதி 10 மணி நேரம் பணிகள் பாதிக்கப்பட்டன. இதனால், திட்டமிட்டபடி, ராக்கெட்டை செலுத்த முடியும் என்ற நம்பிக்கையை இழந்தோம். பின்னர், அக். 22ம் தேதி அதிகாலை 1.30 மணிக்கு அனைத்து விதமான தகவல்களையும் ஆராய்ந்து, திட்டமிட்டபடி ராக்கெட்டை விண்ணில் செலுத்த முடிவு செய்தோம்.
சந்திரயான் - 1 செயற்கைக்கோள், நவம்பர் 8ம் தேதி பூமியின் சுற்றுப்பாதையை அடையும். அன்றிலிருந்து ஒரு வாரத்தில், நிலவிலிருந்து 100 கி.மீ., சுற்றுப்பாதையில் சந்திரயான் - 1 செயற்கைக்கோள் சுற்றவிடப்பட்டு, ஆராய்ச்சிக் கருவிகள் இயக்கப்படும். இக்கருவிகள் நிலவின் இட இயல்புகள், தாதுக்கள் குறித்த முழுமையான வரைபடத்தை உருவாக்கும். தண்ணீர், ஹீலியம்-3 வாயு இருப்பது குறித்தும் ஆய்வு செய்யும்.
சந்திரயான் - 1 செயற்கைக்கோள் நிலவில் சேகரிக்கும் தகவல்கள் நவம்பர் 15ம் தேதி முதல் கிடைக்கத் துவங்கும். இத்தகவல்களைப் பெறவும், செயற்கைக்கோளுக்கு கட்டளைகளை வழங்கவும் பெங்களூருக்கு அருகில் பைலாலு கிராமத்தில் தரைக்கட்டுப்பாட்டு மையம் அமைக்கப்பட்டுள்ளது. சந்திரயான் - 1 செயற்கைக்கோள் இரண்டு ஆண்டுகள் இப்பணியில் ஈடுபடும். மூன் இம்பாக்டர் புரோப் (எம்.ஐ. பி.,) கருவி நவம்பர் 15ம் தேதி நிலவில் மோதி இறங்கும்.
சந்திரயான் - 2 திட்டத்திற்கு மத்திய அரசு அனுமதி வழங்கியுள்ளது. இத்திட்டத்திற்கு 425 கோடி ரூபாய் ஒதுக்கப்பட்டுள்ளது. ஜி.எஸ்.எல்.வி., மூலம் அனுப்பப்படும் சந்திரயான் - 2 திட்டத்தில், ‘லேண்டர் அண்டு ரோவர்’ கருவி இருக்கும். நிலவில் மெதுவாக இறங்கும் தொழில்<நுட்பம் இத்திட்டத்தில் பயன்படுத்தப்படும். ரஷ்யாவுடன் இணைந்து இத்திட்டம் மேற்கொள்ளப்படுகிறது. 2012 -13ம் ஆண்டில் சந்திரயான் - 2 செயற்கைக்கோள் விண்ணில் செலுத்தப்படும்.
இந்தியாவிலேயே உருவாக்கப்பட்ட ‘கிரையோஜெனிக்’ இயந்திரம், அடுத்த ஆண்டு ஏவப்படும் ஜி.எஸ்.எல்.வி., ராக்கெட்டில் பயன்படுத்தப்படும். சந்திரயான் - 3 திட்டத்தில் நிலவிலிருந்து தாதுக்களை பூமிக்கு எடுத்து வர திட்டமிடப்பட்டுள்ளது. 2015ம் ஆண்டு விண்வெளிக்கு மனிதனை அனுப்பும் திட்டம் செயல்படுத்தப் படும். இவ்வாறு ‘இஸ்ரோ’ விஞ்ஞானிகள் கூறினர்.
‘ஜி.எஸ்.எல்.வி., - மாக் 3’ குறித்த கேள்விக்கு பதிலளித்த, அதன் திட்ட இயக்குனர் நாராயணமூர்த்தி, “ஜி.எஸ்.எல்.வி., - மாக் 3 ராக்கெட்டை வடிவமைக்கும் பணி முடிவடைந்துள்ளது. 200 டன் திட எரிபொருள் இயந்திரம் அடுத்த ஆண்டு ஏப்ரல்-மே மாதத்தில் சோதிக்கப்படும். திரவ எரிபொருள் இயந்திரமும் அடுத்த ஆண்டு ஆரம்பத்தில் சோதிக்கப்படவுள்ளது. ஜி.எஸ்.எல்.வி., - மாக் 3 ராக்கெட் 2010ம் ஆண்டு இறுதியில் அல்லது 2011ம் ஆண்டு துவக்கத்தில் விண்ணில் செலுத் தப்படும்,” என்றார்.

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us