தினமலர்
சினிமா
டிவி
Podcast
iPaper
கோயில்கள்
புத்தகங்கள்
Subscription
திருக்குறள்
கடல் தாமரை
Dinamalar Logo

 

/செய்திகள்/கல்விமலர்/செய்திகள்/ஆசிரியர்களுக்கு போனஸ் வழங்க மாணவர்களிடம் வசூல்

ஆசிரியர்களுக்கு போனஸ் வழங்க மாணவர்களிடம் வசூல்

ஆசிரியர்களுக்கு போனஸ் வழங்க மாணவர்களிடம் வசூல்


UPDATED : அக் 24, 2008 12:00 AM

ADDED : ஜன 01, 1970 05:30 AM

Follow on GoogleFavourite on Google

UPDATED : அக் 24, 2008 12:00 AM ADDED : ஜன 01, 1970 05:30 AM


Follow on Google
அ நிறம் | அளவு


பல்லடம்:
ஆசிரியர்களுக்கு தீபாவளி போனஸ் வழங்குவதற்காக, பள்ளி மாணவர்களிடம் கட்டாய நன்கொடை வசூலிப்பதாக புகார் எழுந்துள்ளது.
கோவை, பல்லடம் பகுதியில் 15க்கும் மேற்பட்ட மெட்ரிக் பள்ளிகள் செயல்பட்டு வருகின்றன. இந்த பள்ளிகளில் 15 ஆயிரம் மாணவ, மாணவிகள் படிக்கின்றனர்.
இங்கு, ஒருசில தனியார் பள்ளிகளில், ‘ஆசிரியர்களுக்கு தீபாவளி போனஸ் வழங்க வேண்டும்’ என, மாணவ, மாணவிகளை கட்டாயப்படுத்தி 25 ரூபாய், 50 ரூபாய் என நன்கொடை வசூலிக்கின்றனர். ‘பணம் கொடுக்கவில்லை என்றால் பள்ளியில் இருந்து நீக்கி விடுவோம்’ என மிரட்டுவதாக, புகார் எழுந்துள்ளது.
பள்ளி நிர்வாகம், ஆசிரியர்களுக்கு தீபாவளி போனஸ் வழங்காமல் மாணவர்களிடம் கட்டாயப்படுத்தி வசூல் செய்வது, பெற்றோர்களை அதிர்ச்சி அடையச் செய்துள்ளது.
‘ஆசிரியர் போனஸ் என்ற பெயரில், கட்டாய வசூல் வேட்டையில் ஈடுபடும் பள்ளிகளை கண்டறிந்து சம்பந்தப்பட்ட கல்வி அலுவலர்கள் நடவடிக்கை எடுக்க வேண்டும்’ என்று கோரிக்கை விடுத்துள்ளனர்.

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us