தினமலர்
சினிமா
டிவி
Podcast
iPaper
கோயில்கள்
புத்தகங்கள்
Subscription
திருக்குறள்
கடல் தாமரை
Dinamalar Logo

 

/செய்திகள்/கல்விமலர்/செய்திகள்/இலங்கை தமிழர்களுக்கு ஆதரவு: கொட்டும் மழையில் மனித சங்கிலி

இலங்கை தமிழர்களுக்கு ஆதரவு: கொட்டும் மழையில் மனித சங்கிலி

இலங்கை தமிழர்களுக்கு ஆதரவு: கொட்டும் மழையில் மனித சங்கிலி


UPDATED : அக் 25, 2008 12:00 AM

ADDED : ஜன 01, 1970 05:30 AM

Follow on GoogleFavourite on Google

UPDATED : அக் 25, 2008 12:00 AM ADDED : ஜன 01, 1970 05:30 AM


Follow on Google
அ நிறம் | அளவு

பகல் 1 மணிவரை வெயில் கொளுத்திய நிலையில், 2 மணிமுதல் மழை பெய்யத் துவங்கியது. ஆனால் திட்டமிட்டப்படி பகல் 3 மணியளவில் சென்னை கலெக்டர் அலுவலகம் முன்பு மனித சங்கிலி போராட்டம் துவங்கியது.
கொட்டும் மழையையும் பொருட்படுத்தாமல் அரசியல் கட்சியினர், பல்வேறு அமைப்புகளுடன் பள்ளி, கல்லூரி மாணவ, மாணவியரும் கைகோர்த்தபடி போராட்டத்தில் ஈடுப்பட்டனர். காஞ்சிபுரம் மாவட்டம் அச்சிறுபாக்கம் வரை 40 கி.மீ., தொலைவுக்கு இந்த மனித சங்கிலி நீண்டிருந்தது. இலங்கைத் தமிழர்களுக்கு ஆதரவாக கோஷங்களை எழுப்பினர். முதல்வர் மாலை 5 மணிக்கு காரில் அமர்ந்தபடி மனித சங்கிலியை பார்வையிட்டார்.
இடைவிடாத மழையில் மாலை 5 மணிவரை மாணவர்கள் போராட்டத்தில் பங்கேற்றனர். இது, 20 ஆண்டுகளுக்கு பிறகு தமிழகத்தில் ஈழத் தமிழர்களுக்கு ஆதரவாக நடத்தப்பட்ட மனித சங்கிலி என்பது குறிப்பிடத்தக்கது.
கட்டாயத்தின் பேரில் போராட்டம்?:
தமிழக முதல்வர் கருணாநிதி வரும் வரை மனித சங்கிலியை தொடர வேண்டும் என்று மாணவ, மாணவியருக்கு கல்வி நிறுவன நிர்வாகத்தால் உத்தரவிடப்பட்டுள்ளது. அதன்பேரில் தான் நூற்றுக்கணக்கான மாணவ, மாணவியர் கொட்டும் மழையிலும் மணிக்கணக்கில் ரோட்டில் நின்றனர் என்று புகார் கூறப்படுகிறது.

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us