UPDATED : டிச 27, 2012 12:00 AM
ADDED : டிச 27, 2012 10:44 AM
பள்ளி மாணவர்கள் சுற்றுப்புறசூழல், குடும்ப நிலை, இளம் பருவத்தில் ஏற்படும் மாற்றங்கள், மனசோர்வு, மனக்குழப்பம், பாலியல் வன் கொடுமைகள், மதிப்பெண் குறைவு போன்ற பல்வேறு காரணங்களால் பாதிக்கப்படுகின்றனர். இதன் விளைவால் கொலை, தற்கொலை உள்ளிட்ட முரண்பாடான முடிவுகளை எடுப்பதுடன், உடல் மற்றும் மன ரீதியாகவும் பாதிப்பு ஏற்படுகிறது.
இந்த நிலையை மாற்றி, மாணவர்களுக்கு மகிழ்ச்சியான சூழலை உருவாக்க, பள்ளியில் பயிலும் மாணவ, மாணவியருக்கு உளவியல் ஆலோசனை வழங்கும் வகையில், உளவியல் ஆலோசகர், உதவியாளர் மற்றும் அனைத்து வசதிகளுடன் கூடிய, 10 நடமாடும் ஆலோசனை மையங்கள், மூன்று கோடி ரூபாய் செலவில் அமைக்கப்படுகிறது.
இதுகுறித்து கல்வித்துறை அதிகாரி ஒருவர் கூறியதாவது: பயிற்சி பெற்ற ஆசிரியர்கள், ஒன்பதாம் வகுப்பு முதல், பிளஸ் 2 மாணவர்களை மையப்படுத்தி, அவர்களின் உள்ளார்ந்த உணர்வுகள் தொடர்ந்து பரிசோதிக்கப்படும். மாணவர்களுக்கும், பெற்றோருக்கும் தொழில் மற்றும் வாழ்கை சார்ந்த பயிற்சிகள் வழங்கப்படும். இத்திட்டம் விரைவில் துவங்கப்படவுள்ளது. இவ்வாறு, அவர் கூறினார்.
