தினமலர்
sub-imageசினிமா
sub-imageடிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

 

/செய்திகள்/கல்விமலர்/செய்திகள்/ஜனவரி 3,4 தேதிகளில் வி.ஏ.ஓ. கலந்தாய்வு

ஜனவரி 3,4 தேதிகளில் வி.ஏ.ஓ. கலந்தாய்வு

ஜனவரி 3,4 தேதிகளில் வி.ஏ.ஓ. கலந்தாய்வு


UPDATED : டிச 28, 2012 12:00 AM

ADDED : டிச 28, 2012 10:08 AM

Follow on GoogleFavourite on Google

UPDATED : டிச 28, 2012 12:00 AM ADDED : டிச 28, 2012 10:08 AM


Follow on Google
அ நிறம் | அளவு

வி.ஏ.ஓ., காலி பணியிடங்களை நிரப்புவதற்கான போட்டித் தேர்வு, கடந்த செப்டம்பர், 30ல் நடந்தது; 10 லட்சம் பேர், தேர்வை எழுதினர். இதன் முடிவுகள், நவம்பர், 30ல் வெளியிடப்பட்டது. இதைத் தொடர்ந்து, 1,870 வி.ஏ.ஓ.,க்களை, பணி நியமனம் செய்வதற்கான கலந்தாய்வு, ஜனவரி, 3,4 தேதிகளில் நடக்கும் என, டி.என்.பி.எஸ்.சி., அறிவித்துள்ளது.

தேர்வு பெற்றவர்களுக்கு, விரைவு தபால் வழியாக, தகவல் தெரிவிக்கப்பட்டுள்ளன என்றும், தேர்வாணையம் தெரிவித்துள்ளது. மாவட்ட வாரியாக, காலி பணியிடங்கள் எண்ணிக்கை குறித்த விவரங்கள், தேர்வாணைய இணையதளத்தில் (www.tnpsc.gov.in) வெளியிடப்பட்டுள்ளன.

அதன்படி, சென்னை, கன்னியாகுமரி மாவட்டங்களில், காலி பணியிடங்கள் இல்லை. இதர, 30 மாவட்டங்களில், 1,870 வி.ஏ.ஓ.,க்களும், பணி நியமனம் செய்யப்படுகின்றனர். ஆசிரியர் காலி இடங்களைப்போல், வி.ஏ.ஓ.,க்கள் இடங்களும், வட மாவட்டங்களில் தான், அதிகளவில் காலியாக உள்ளன.

காஞ்சிபுரம் மாவட்டத்தில் 123, கடலூரில் 88, கிருஷ்ணகிரியில் 73, திருவள்ளூரில் 100, திருவண்ணாமலையில் 115, வேலூரில் 112, விழுப்புரத்தில் 167 பணியிடங்கள் காலியாக உள்ளன.

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us