UPDATED : டிச 28, 2012 12:00 AM
ADDED : டிச 28, 2012 10:06 AM
அ நிறம் | அளவு
கொடைக்கானல்: கொடைக்கானல் பேருந்து நிலையத்தில் நின்றிருந்த பத்தாம் வகுப்பு பள்ளி மாணவி மாயமானது குறித்து போலீசார் விசாரித்து வருகின்றனர்.
மதுரை பரவை அனாதைகள் பெண்கள் காப்பகத்தில் தங்கியிருந்தவர், பிரியா(15) (பெயர் மாற்றப்பட்டுள்ளது). இவர் கொடைக்கானல் பாம்பார் புரத்தில் உள்ள ஒரு தனியார் காப்பகத்தில் தங்கி, அங்குள்ள பள்ளியில் பத்தாம் வகுப்பு படித்து வந்தார்.
நேற்று முன்தினம் பிரியாவும், அவரது தோழியும் கொடைக்கானலுக்கு பேருந்தில் வந்துள்ளனர். பேருந்து நிலையத்தில் இறங்கியுடன், தனது மாமா அழைப்பதாக கூறி சென்ற பிரியாவை காணவில்லை. இதுகுறித்து தனியார் காப்பகம் அளித்த புகாரின் பேரில் கொடைக்கானல் போலீசார் விசாரித்து வருகின்றனர்.
