தினமலர்
sub-imageசினிமா
sub-imageடிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

 

/செய்திகள்/கல்விமலர்/செய்திகள்/ஒரேயொரு மாணவிக்கு 2 ஆசிரியர்கள்: அரசு பள்ளி மூடல் எப்போது?

ஒரேயொரு மாணவிக்கு 2 ஆசிரியர்கள்: அரசு பள்ளி மூடல் எப்போது?

ஒரேயொரு மாணவிக்கு 2 ஆசிரியர்கள்: அரசு பள்ளி மூடல் எப்போது?


UPDATED : ஜன 25, 2013 12:00 AM

ADDED : ஜன 25, 2013 07:13 AM

Follow on GoogleFavourite on Google

UPDATED : ஜன 25, 2013 12:00 AM ADDED : ஜன 25, 2013 07:13 AM


Follow on Google
அ நிறம் | அளவு

இந்த பள்ளியில், 2010-11ம் ஆண்டில், 11 குழந்தைகளும், 2011-12ம் ஆண்டில், ஏழு குழந்தைகளும் பயின்றனர். தற்போது ஒரு மாணவி மட்டுமே பயின்று வருகிறார். டி.கிளியூர் கிராம மக்கள் கூறுகையில், "அரசு பள்ளிகளில் ஆசிரியர்கள், சரிவர வருவதில்லை. கல்வித்தரம் மற்றும் குழந்தைகள் மீதான அக்கறை கருதி, வெளியூரில் உள்ள தனியார் பள்ளிகளில், குழந்தைகளை சேர்த்துள்ளோம்" என்றனர்.

டி.கிளியூர் துவக்கப்பள்ளி தலைமை ஆசிரியர் சத்தியா கூறியதாவது: கிராம மக்கள் கூறும் குற்றச்சாட்டில் உண்மையில்லை. பள்ளிக்கு சரியான நேரத்திற்கு வருகிறோம். ஒரு மாணவி மட்டும், இப்பள்ளியில் நான்காம் வகுப்பு படித்து வருகிறார். அவளுக்கு நானும், மற்றொரு ஆசிரியரும் நிறைவாக பாடம் நடத்தி வருகிறோம்.  ஒரு சத்துணவு அமைப்பாளர், சமையல் உதவியாளர், மாணவிக்கு சமையல் செய்து கொடுக்கின்றனர், இவ்வாறு அவர் கூறினார்.

உதவி தொடக்கக்கல்வி அலுவலர் அண்ணாதுரை கூறியதாவது: மாணவர் சேர்க்கைக்காக விழிப்புணர்வு நிகழ்ச்சிகள் பல நடத்தியும், வீடு, வீடாக பிரசாரம் செய்தும், இந்த பள்ளியில் குழந்தைகளை சேர்க்க பெற்றோர் ஆர்வம் காட்டவில்லை. பள்ளியை மூடவும், ஆசிரியர்களை வேறு பள்ளிகளில் இடமாற்ற செய்ய, நடவடிக்கை எடுத்து வருகிறோம். இவ்வாறு அவர் கூறினார்.

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us