தினமலர்
சினிமா
டிவி
Podcast
iPaper
கோயில்கள்
புத்தகங்கள்
Subscription
திருக்குறள்
கடல் தாமரை
Dinamalar Logo

 

/செய்திகள்/கல்விமலர்/செய்திகள்/பல்கலைக்கழகங்களில் நவீன கல்வி கூடங்கள்: ரூ.2 கோடி ஒதுக்கீடு

பல்கலைக்கழகங்களில் நவீன கல்வி கூடங்கள்: ரூ.2 கோடி ஒதுக்கீடு

பல்கலைக்கழகங்களில் நவீன கல்வி கூடங்கள்: ரூ.2 கோடி ஒதுக்கீடு


UPDATED : ஜன 25, 2013 12:00 AM

ADDED : ஜன 25, 2013 07:53 AM

Follow on GoogleFavourite on Google

UPDATED : ஜன 25, 2013 12:00 AM ADDED : ஜன 25, 2013 07:53 AM


Follow on Google
அ நிறம் | அளவு

மதுரை காமராஜ், மனோன்மணியம் சுந்தரனார், பாரதியார், பாரதிதாசன், அழகப்பா, பெரியார், திருவள்ளுவர், சென்னை பல்கலைக்கழகம் உள்ளிட்ட, 10  பல்கலைக்கழகங்களில், அரசு, நவீன கல்வி கூடங்களை அமைக்க உள்ளது. ஒவ்வொரு பல்கலைக்கும், 20 லட்ச ரூபாய் என, மொத்தம், 2 கோடி ரூபாய் ஒதுக்கப்பட்டுள்ளது.

திரை, திரையிடும் கருவி, கணினி உள்ளிட்டவற்றுடன் இணைத்து, நவீன கல்வி கூடங்கள் உருவாக்கப்பட உள்ளன. இணையதளமும் இத்துடன் இணைக்கப்பட்டிருக்கும். "பவர் பாயின்ட், அனிமேஷன்" முறையில் கற்றுத் தரும் வகையில், பாடங்கள் உருவாக்கப்படுகின்றன.

திரையில் பாடங்கள் குறித்த தகவல்களை, எழுதுகோல் மூலமாக எழுதலாம். இவை கணினியில் பதிவாகின்றன. மாணவர்கள் கல்லூரிக்கு வரவில்லை என்றால், "சிடி, பென் டிரைவ்" ஆகியவற்றில் பதிந்து, கற்றுக் கொள்ளலாம்.

சென்னை பல்கலைக் கழக பாடத் திட்டக் குழு தலைவர், ரவீந்திரன் கூறியதாவது: ஆசிரியர் பாடம் எடுக்கும் போது, மாணவர்களுக்கு கவன சிதறல் ஏற்பட வாய்ப்பு உண்டு. படங்களை இணைத்து, "பவர் பாயின்ட், அனிமேஷன்" மூலம் வகுப்புகள் எடுக்கும் போது, கவனம் சிதறாது.

மொழி பிரச்னையில் சிக்கும் மாணவர்களும், படங்கள் வாயிலாக, பாடங்களை எளிதில் புரிந்து கொள்ள முடியும்.
இம்முறையில் கல்வி கற்பிப்பதால், நேரம் சேமிக்கப்படுகிறது. இவ்வாறு, ரவீந்திரன் கூறினார்.

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us