தினமலர்
சினிமா
டிவி
Podcast
iPaper
கோயில்கள்
புத்தகங்கள்
Subscription
திருக்குறள்
கடல் தாமரை
Dinamalar Logo

 

/செய்திகள்/கல்விமலர்/செய்திகள்/எம்.எஸ்சி., செய்முறை தேர்வுக்கான இடங்கள்: காமராஜ் பல்கலை அறிவிப்பு

எம்.எஸ்சி., செய்முறை தேர்வுக்கான இடங்கள்: காமராஜ் பல்கலை அறிவிப்பு

எம்.எஸ்சி., செய்முறை தேர்வுக்கான இடங்கள்: காமராஜ் பல்கலை அறிவிப்பு


UPDATED : ஜன 26, 2013 12:00 AM

ADDED : ஜன 26, 2013 07:28 AM

Follow on GoogleFavourite on Google

UPDATED : ஜன 26, 2013 12:00 AM ADDED : ஜன 26, 2013 07:28 AM


Follow on Google
அ நிறம் | அளவு

மதுரை: மதுரை காமராஜ் பல்கலை தொலைநிலைக் கல்வி இயக்கக (அல்பருவ முறை) எம்.எஸ்சி., படிப்புக்கான, செய்முறை தேர்வுகள் (2011-12),  ஜனவரி 28ல், துவங்குகின்றன. இதற்கான  செய்முறைத்  தேர்வு நடைபெறும் இடங்களை காமராஜ் பல்கலைக்கழகம் அறிவித்துள்ளது.

மின்னனுவியலும் தகவலியலும்: முதல் (12சி) மற்றும் இரண்டாம் ஆண்டு (11சி) மாணவருக்கு, ஜன., 28, 29 ல், மதுரை பசுமலை சவுராஷ்டிரா கல்லூரியிலும்; பிப்., 2, 3 ல், சென்னை சோழிங்கநல்லூர் முகமது சதக் கலை மற்றும் அறிவியல் கல்லூரியிலும் நடக்கிறது.

எம்.எஸ்சி., வேதியியல் (தமிழகம் மட்டும்): முதல் மற்றும் இரண்டாம் ஆண்டு மாணவர்களுக்கு, ஜன., 28 முதல் 31 வரை, மதுரை நாகமலை புதுக்கோட்டை என்.எம்.எஸ்.எஸ்., வெள்ளைச்சாமி நாடார் கல்லூரி. பிப்., 2 மற்றும் 3 ல், சென்னை, முகமது சதக் கலை மற்றும் அறிவியல் கல்லூரி.

எம்.எஸ்சி., புவியியல் (தமிழகம் மட்டும்): முதலாம் ஆண்டு மாணவர்களுக்கு (12சி) ஜன., 28, 29 லிலும், இரண்டாம் ஆண்டு மாணவர்களுக்கு (11சி) ஜன.,30, 31 மற்றும் பிப்.,1 ல், மதுரை நாகமலைபுதுக்கோட்டையில் உள்ள என்.எம்.எஸ்.எஸ்., வெள்ளைச்சாமி நாடார் கல்லூரி மற்றும் திருப்பாலை யாதவா கல்லூரியிலும் தேர்வுகள் நடக்கின்றன. இத்தகவலை, பல்கலை கூடுதல் தேர்வாணையர் (பொறுப்பு) சாராதாம்பாள் தெரிவித்தார்.

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us