படித்தவர்களிடம் அகந்தை கூடாது: மோகன் பாகவத் அறிவுரை
படித்தவர்களிடம் அகந்தை கூடாது: மோகன் பாகவத் அறிவுரை
UPDATED : ஜன 29, 2013 12:00 AM
ADDED : ஜன 29, 2013 07:54 AM
அ நிறம் | அளவு
மகாராஷ்டிரா மாநிலம் செம்பூர் நகரி்ல் விவேகானந்தா கல்வி சமுதாய அமைப்பின் பொன்விழாவில் கலந்து கொண்டு அவர் பேசியதாவது: வாழ்கையி்ல் இளைஞர்கள் கடும் சவாலை எதிர்கொள்ள வேண்டும். அதற்கு கல்வி தான் துணையாக நிற்கும்.
தேர்வில் தோல்வியடைந்தால், அதற்காக மாணவர்கள் மனம் தளர்ந்து தற்கொலை போன்ற தவறான முடிவுக்கு சொல்லாதீர்கள். படித்தவர்கள் எதிலும் சரியான முடிவினை எடுப்பவர்களாக இருக்க வேண்டும். அதற்காக, "தான்" என்ற அகந்தை கொள்ளக் கூடாது.
எதையும் துணிச்சலுடன் எதிர்கொள்ளுங்கள். சுயமரியாதையையும், கண்ணியத்தையும் கற்றுத்தருவது கல்வி ஒன்று தான். இவ்வாறு மோகன்பாகவத் கூறினார்.
