தினமலர்
சினிமா
டிவி
Podcast
iPaper
கோயில்கள்
புத்தகங்கள்
Subscription
திருக்குறள்
கடல் தாமரை
Dinamalar Logo

 

/செய்திகள்/கல்விமலர்/செய்திகள்/பட்டம் வழங்காத பாரதிதாசன் பல்கலை - தவிக்கும் மாணவர்கள்

பட்டம் வழங்காத பாரதிதாசன் பல்கலை - தவிக்கும் மாணவர்கள்

பட்டம் வழங்காத பாரதிதாசன் பல்கலை - தவிக்கும் மாணவர்கள்


UPDATED : பிப் 02, 2013 12:00 AM

ADDED : பிப் 02, 2013 10:33 AM

Follow on GoogleFavourite on Google

UPDATED : பிப் 02, 2013 12:00 AM ADDED : பிப் 02, 2013 10:33 AM


Follow on Google
அ நிறம் | அளவு

திருச்சி: பாரதிதாசன் பல்கலையில், கடந்த ஆண்டு பட்டம் வழங்காததால், 58 ஆயிரம் மாணவர் பாதிக்கப்பட்டுள்ளதாக புகார் எழுந்துள்ளது. திருச்சி பாரதிதாசன் பல்கலையின் கட்டுப்பாட்டில், திருச்சி, தஞ்சை, நாகை, திருவாரூர், புதுக்கோட்டை, அரியலூர், பெரம்பலூர், கரூர் மாவட்டங்களை சேர்ந்த, 93 கலை, அறிவியல் கல்லூரிகள் உள்ளன.

இக்கல்லூரிகளில், ஒவ்வொரு கல்வி ஆண்டு இறுதியிலும், பல்லாயிரக்கணக்கான மாணவ, மாணவியர் படிப்பை நிறைவு செய்து வெளியேறுகின்றனர். அப்போது அவர்களுக்கு, உடனடியாக, "புரவிஷனல்" சான்று, மதிப்பெண் சான்று வழங்கப்படும். இந்த சான்றை, மாணவர்கள் தங்களது உயர்கல்வி, வேலைவாய்ப்புக்கு பயன்படுத்திக்கொள்வர். புரவிஷனல் சான்று, ஆறு மாதத்துக்கு பின் செல்லாது; அதன்பிறகு பட்டம் அவசியம். பட்டம் இருந்தால்தான் மேல் படிப்புக்கோ, வேலைக்கோ செல்ல முடியும்.

2011-2012 கல்வி ஆண்டில் பாரதிதாசன் பல்கலைக்கு உட்பட்ட கல்லூரிகளில் படித்த, 58 ஆயிரத்துக்கும் மேற்பட்ட மாணவ, மாணவியருக்கு, இன்னும் பட்டம் வழங்கப்படவில்லை. இதனால், மாணவர்கள் பாதிக்கப்பட்டுள்ளனர். எனவே, உடனடியாக பட்டம் வழங்க வேண்டும் என, கல்லூரி நிர்வாகங்கள், பல்கலை நிர்வாகத்திடம் கோரி வருகிறது. ஆனால், பல்கலை நிர்வாகம் பதில் கூறாமல் அமைதியாகவே உள்ளது.

இதுகுறித்து பல்கலை வட்டாரத்தில் விசாரித்தபோது, அவர்கள் கூறியதாவது: கடந்த, தி.மு.க., ஆட்சியின்போது, பல்கலை துணைவேந்தராக மீனா பதவியேற்றார். பல்கலையில் ஏராளமான முறைகேடு புகார்கள் உள்ளன. ஆட்சி மாற்றத்துக்குப்பின், முதல்வர் ஜெயலலிதாவை, துணைவேந்தர் மீனா சந்திக்க முயன்று வருகிறார். தன்னை சந்திக்க, இதுவரை, துணைவேந்தருக்கு, முதல்வர் தேதி கொடுக்காமல் உள்ளார்.

இந்நிலையில், முதல்வரை குளிர்விக்கும் வகையில், அவரது கையால் பல்லாயிரக்கணக்கான மாணவ, மாணவியருக்கு, ஒரே நேரத்தில் பட்டம் வழங்க, துணைவேந்தர் திட்டமிட்டுள்ளார். அதற்காகவே, இதுவரை மாணவ, மாணவியருக்கு பட்டங்கள் வழங்காமல் நிலுவையில் வைக்கப்பட்டுள்ளது. டிசம்பர் மாதமே, கடந்த கல்வியாண்டில் படிப்பை முடித்த, மாணவர்களுக்கு பட்டம் வழங்கியிருக்க வேண்டும். இவ்வாறு அவர்கள் கூறினர்.

பட்டம் வழங்காததால், தங்கள் குழந்தைகளின் மேல் படிப்பு, வெளிநாடு செல்வது, வேலை வாய்ப்பு தடைபடுவதாக, பெற்றோர் புலம்பி வருகின்றனர். இனியும், பல்கலை அமைதி காக்காமல், உடனடியாக பட்டங்களை வழங்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என்பதே கல்வியாளர்களின் எதிர்பார்ப்பு.

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us