ஐதராபாத்தில் ரூ.2,000 கோடி செலவில் விளையாட்டு பல்கலை
ஐதராபாத்தில் ரூ.2,000 கோடி செலவில் விளையாட்டு பல்கலை
UPDATED : பிப் 04, 2013 12:00 AM
ADDED : பிப் 04, 2013 12:21 PM
இந்த விளையாட்டு பல்கலைக் கழகத்தில், குழந்தை பருவத்திலிருந்தே விளையாட்டு பயிற்சி அளித்து, தரமான வீரர்களை உருவாக்க திட்டமிடப்பட்டுள்ளது. யாஷ் பிர்லா குழுமத்தின் உதவுடன், 2,000 கோடி ரூபாய் செலவில், துவக்கப்பட உள்ள, இந்த பல்கலைக் கழகத்தில், விளையாட்டு தொடர்பான அனைத்து வசதிகளும், மிக பெரிய ஸ்டேடியமும் இருக்கும்.
உலக அளவிலான, பெரிய விளையாட்டு நிறுவனங்களுடன் ஒப்பந்தம் ஏற்படுத்தப்பட்டு, வீரர்களுக்கு உயரிய பயிற்சி அளிக்கப்பட உள்ளது. மாநில முதல்வர், கிரண்குமார் ரெட்டி, முன்னாள் கிரிக்கெட் வீரர் என்பதால், விளையாட்டு மேம்பாட்டில் அதிக ஆர்வமாக உள்ளார்.
294 தொகுதிகளிலும், விளையாட்டு அரங்கங்களை ஏற்படுத்த வேண்டும்; 87 பசுமை விளையாட்டு மற்றும் கலாசார அரங்கங்களை ஏற்படுத்த வேண்டும் என்றும், அவர் உத்தரவிட்டுள்ளார். இந்த மெகா திட்டம், இன்னும் ஒரு சில ஆண்டுகளில் நிறைவேற்றப்படும் என, மாநில அதிகாரி ஒருவர் கூறினார்.
