தினமலர்
சினிமா
டிவி
Podcast
iPaper
கோயில்கள்
புத்தகங்கள்
Subscription
திருக்குறள்
கடல் தாமரை
Dinamalar Logo

 

/செய்திகள்/கல்விமலர்/செய்திகள்/துணைவேந்தர் ஓய்வு வயது: சட்ட திருத்த மசோதா தாக்கல்

துணைவேந்தர் ஓய்வு வயது: சட்ட திருத்த மசோதா தாக்கல்

துணைவேந்தர் ஓய்வு வயது: சட்ட திருத்த மசோதா தாக்கல்


UPDATED : பிப் 07, 2013 12:00 AM

ADDED : பிப் 07, 2013 08:10 AM

Follow on GoogleFavourite on Google

UPDATED : பிப் 07, 2013 12:00 AM ADDED : பிப் 07, 2013 08:10 AM


Follow on Google
அ நிறம் | அளவு

சென்னை: அண்ணா பல்கலை துணைவேந்தரின் ஓய்வு வயதை, 65லிருந்து, 70 ஆக உயர்த்தும், சட்ட திருத்த மசோதா, சட்டசபையில் நேற்று தாக்கல் செய்யப்பட்டது.

பல்கலைக்கழகங்களின் துணைவேந்தர்களுக்கான ஓய்வு பெறும் வயது, 65 ஆக இருந்தது. இதனை, 70 ஆக உயர்த்த முடிவெடுக்கப்பட்டு, சில பல்கலைக் கழகங்களில், ஓய்வு பெறும் வயது உயர்த்தப்பட்டது.

இந்த வகையில், மத்திய பல்கலைக்கழகங்கள் சட்டத்திற்கு இணையாக, அண்ணா பல்கலைக்கழக துணைவேந்தரின் ஓய்வுபெறும் வயது, 65ல் இருந்து, 70 வயதிற்கு உயர்த்தும் வகையில் சட்டம் திருத்தப்படுகிறது.

இதுகுறித்த, சட்ட திருத்த மசோதாவை, உயர்கல்வித் துறை அமைச்சர் பழனியப்பன், சட்டசபையில் தாக்கல் செய்தார்.

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us