தினமலர்
சினிமா
டிவி
Podcast
iPaper
கோயில்கள்
புத்தகங்கள்
Subscription
திருக்குறள்
கடல் தாமரை
Dinamalar Logo

 

/செய்திகள்/கல்விமலர்/செய்திகள்/இந்திய பொருளதாரம் இருக்கிற வேலையை கெடுக்காது: சிதம்பரம்

இந்திய பொருளதாரம் இருக்கிற வேலையை கெடுக்காது: சிதம்பரம்

இந்திய பொருளதாரம் இருக்கிற வேலையை கெடுக்காது: சிதம்பரம்


UPDATED : நவ 01, 2008 12:00 AM

ADDED : ஜன 01, 1970 05:30 AM

Follow on GoogleFavourite on Google

UPDATED : நவ 01, 2008 12:00 AM ADDED : ஜன 01, 1970 05:30 AM


Follow on Google
அ நிறம் | அளவு


புதுடில்லி:
இந்தியாவில் இன்னும் பத்தாண்டுகளில் முக்கிய துறைகளில் பணியாற்றும் ஊழியர்களில் 25 சதவீதம் முதல் 30 சதவீதம் வரை வேலை இழக்கும் நிலை ஏற்படும் என கூறப்படுகிறது.
இந்நிலையில், நிருபர்களிடம் மத்திய நிதியமைச்சர் ப.சிதம்பரம் கூறியதாவது:
நமது பொருளாதாரம் வேலை வாய்ப்பை உருவாக்குமே தவிர, இருக்கிற வேலை அழிக்காது. மொத்த உள்நாட்டு உற்பத்தி 9 சதவீதத்திலிருந்து 7 சதவீதத்திற்கு வந்துவிட்டதால், புதிய வேலைவாய்ப்புகளை உருவாக்குவதில் சற்று தொய்வு ஏற்படலாமே தவிர, தற்போதுள்ள வேலைவாய்ப்புகள்  பறிபோகாது.
மத்தியில் தே.ஜ., கூட்டணி அரசு இருந்தபோது பொருளாதார வளர்ச்சி 5.8 சதவீதம் தான் இருந்தது. அப்போது இருந்த வேலைவாய்ப்புகளை விட, ஐக்கிய முற்போக்கு கூட்டணி அரசில்  அதிகமாக உள்ளது. இப்போது எழும் கேள்விகள் அன்றைய தினம் எழுப்பப்படவில்லை. சர்வதேச அளவில் ஏற்பட்ட பொருளாதார நெருக்கடி வளரும் நாடுகளின் வளர்ச்சியை பாதித்துவிட்டது. இந்தியாவை பொருத்தமட்டில் மறைமுகமாக பாதிப்பு ஏற்பட்டுவிட்டது.
உச்சத்தில் இருந்த பணவீக்கம் 11 சதவீதத்திற்கு கீழ் கொண்டு வரப்பட்டு உள்ளது. மேலும் கட்டுப்படுத்த தேவையான நடவடிக்கைகள் எடுக்கப்பட்டுள்ளன. இவ்வாறு சிதம்பரம் கூறினார்.

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us