தினமலர்
சினிமா
டிவி
Podcast
iPaper
கோயில்கள்
புத்தகங்கள்
Subscription
திருக்குறள்
கடல் தாமரை
Dinamalar Logo

 

/செய்திகள்/கல்விமலர்/செய்திகள்/இக்னோ பல்கலையில் ஆன்லைன் மூலம் இலவசப் பாடத் திட்டங்கள்

இக்னோ பல்கலையில் ஆன்லைன் மூலம் இலவசப் பாடத் திட்டங்கள்

இக்னோ பல்கலையில் ஆன்லைன் மூலம் இலவசப் பாடத் திட்டங்கள்


UPDATED : பிப் 10, 2013 12:00 AM

ADDED : பிப் 10, 2013 08:51 AM

Follow on GoogleFavourite on Google

UPDATED : பிப் 10, 2013 12:00 AM ADDED : பிப் 10, 2013 08:51 AM


Follow on Google
அ நிறம் | அளவு

பல்கலை பேராசிரியர்கள், பொறுப்பாளர்களுக்கான கலந்தாய்வில் அவர் பேசியதாவது: பல்கலையில் 530 பாடத்திட்டங்கள், மதுரை மண்டலத்தில் 120 பாடத்திட்டங்கள் உள்ளன. முதன்முதலாக இணையதளத்தின் மூலம் 2000க்கும் மேற்பட்ட பாடத்திட்டங்கள், கருத்தரங்க தகவல்களை வெளியிட்டுள்ளோம்.

"ஆன்லைன்" மூலம் மாணவர்கள் இலவசமாக படிக்கலாம். அடுத்த மாதத்தில் "ஞான் வாணி" பண்பலை, மதுரை மண்டலத்தில் துவங்க உள்ளது. இதில் "டோல் ப்ரீ" எண் மூலம், மாணவர்கள், நிபுணர்களுடன் இலவசமாக கலந்துரையாடலாம்.

சென்னையில் ஹீரோ நிறுவனத்தின் மூலம் "மோட்டார் ரிப்பேரிங்" குறித்த சான்றிதழ் பயிற்சியில், 100 பேருக்கு வேலைவாய்ப்பு வழங்கப்பட்டது. அதில் 20 பேர் டீலர்களாக உள்ளனர். படிக்காதவர்களையும், இம்மையத்தில் சேர்க்கும் வகையில், நிறைய சான்றிதழ் பயிற்சி வகுப்புகளை நடத்தி வருகிறோம்.

மதுரை மண்டலத்தில் விரைவில் "மோட்டார் ரிப்பேரிங்" பயிற்சி துவக்கப்படும். விவசாயம், நீர் மேலாண்மை தொடர்பான சான்றிதழ் வகுப்புகளும் நடத்தப்பட உள்ளன, என்றார்.

பயிற்சி கையேட்டை, மதுரை காமராஜ் பல்கலை டீன் ராஜ்யகொடி வெளியிட்டார். மண்டல துணை இயக்குனர் கிஷோர் குமார், உதவி இயக்குனர் நம்பூதிரிபாட், உதவி பதிவாளர் விஜயகுமார் பங்கேற்றனர்.

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us