UPDATED : பிப் 11, 2013 12:00 AM
ADDED : பிப் 11, 2013 03:30 PM
அ நிறம் | அளவு
ஈரோடு: ஈரோடு மேட்டுக்கடை சூர்யா இன்ஜி., கல்லூரியில் முதலாமாண்டு மாணவர்களுக்கு லேப்டாப் வழங்கும் விழா நடந்தது.
மேட்டுக்கடை சூர்யா இன்ஜி., கல்லூரி வளாகத்தில், முதலாமாண்டு மேலாண்மைத்துறை மாணவ, மாணவிகளுக்கான இலவச லேப்டாப் வழங்கும் விழா நடந்தது. சிறப்பு விருந்தினராக கோவை அண்ணா பல்கலை., மண்டல இயக்குனர் விக்ரமன் பங்கேற்று, மாணவர்களுக்கு லேப்டாப்பை வழங்கினார்.
கல்லூரி தலைவர் இளங்கோ, தாளாளர் கலைச்செல்வன், முதல்வர் விஜயன், நிர்வாக அலுவலர் சண்முகசேகர், மேலாண்மைத்துறை தலைவர் நந்தக்குமார் உள்பட பலர் பங்கேற்றனர்.
