தினமலர்
சினிமா
டிவி
Podcast
iPaper
கோயில்கள்
புத்தகங்கள்
Subscription
திருக்குறள்
கடல் தாமரை
Dinamalar Logo

 

/செய்திகள்/கல்விமலர்/செய்திகள்/மாணவனுக்கு சூடு வைத்த மதரசா ஆசிரியர்கள் கைது

மாணவனுக்கு சூடு வைத்த மதரசா ஆசிரியர்கள் கைது

மாணவனுக்கு சூடு வைத்த மதரசா ஆசிரியர்கள் கைது


UPDATED : பிப் 13, 2013 12:00 AM

ADDED : பிப் 13, 2013 08:59 AM

Follow on GoogleFavourite on Google

UPDATED : பிப் 13, 2013 12:00 AM ADDED : பிப் 13, 2013 08:59 AM


Follow on Google
அ நிறம் | அளவு

ஜம்மு: ஜம்மு-காஷ்மீர் மாநிலத்தில், மதரசாவுக்கு, செல்லாமல் புறக்கணித்த, 11 வயது மாணவனின் கால்களை, இரும்பு கம்பியால் சூடு போட்டு, பொசுக்கிய, இரு ஆசிரியர்கள் கைது செய்யப்பட்டனர்.

முஸ்லிம் மத வழிபாட்டு முறைகளை கற்று கொடுக்கும் மதரசா பள்ளி, ஜம்முவின் ரஜோரி பகுதியில் உள்ளது. மாணவர்கள் தங்கி படிக்கும் இங்கு, முகமது முஷாரப், 11, என்ற மாணவன் உட்பட, ஏராளமான மாணவர்கள் படித்து வருகின்றனர்.

வகுப்புக்கு சரியாக வராமல், புறக்கணித்து வந்த முகமது முஷாரபை, பல முறை ஆசிரியர்கள் கண்டித்தும், அவன் பின்பற்றவில்லை. இதனால் கோபமடைந்த, இரு ஆசிரியர்கள், சிறுவன் என்றும் பாராமல், பழுக்க காய்ச்சிய இரும்பு கம்பியால், முஷாரபின் கால்களில் சூடு போட்டனர்.

வலியால் அலறி துடித்த சிறுவனை, அவர்கள் அப்படியே விட்டு விட்டனர். இரண்டு நாட்களுக்கு முன், சிறுவனை பார்க்க வந்த தாய் மாமா, முஷாரபின் கால்களில் சூடு போடப்பட்டிருந்த காயத்தை பார்த்து அதிர்ந்தார்.

ஆசிரியர்களின் கொடூரத்தை, மாமாவிடம் முஷாரப் விளக்கினான். சூடு போட்ட ஆசிரியர்கள் மீது, போலீசில் புகார் கொடுக்கப்பட்டதை அடுத்து, அவர்கள், இருவரும் கைது செய்யப்பட்டு, நேற்று சிறையில் அடைக்கப்பட்டனர்.

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us