தினமலர்
சினிமா
டிவி
Podcast
iPaper
கோயில்கள்
புத்தகங்கள்
Subscription
திருக்குறள்
கடல் தாமரை
Dinamalar Logo

 

/செய்திகள்/கல்விமலர்/செய்திகள்/இன்ஜி., காலியிடங்களுக்கு காரணம் என்ன?

இன்ஜி., காலியிடங்களுக்கு காரணம் என்ன?

இன்ஜி., காலியிடங்களுக்கு காரணம் என்ன?


UPDATED : பிப் 13, 2013 12:00 AM

ADDED : பிப் 13, 2013 11:14 AM

Follow on GoogleFavourite on Google

UPDATED : பிப் 13, 2013 12:00 AM ADDED : பிப் 13, 2013 11:14 AM


Follow on Google
அ நிறம் | அளவு

போதுமான மாணவர் சேர்க்கை இல்லாத காரணத்தால், பல இன்ஜினியரிங் கல்லுõரிகள் மூடுவதற்கு அனுமதி கேட்டு அனைத்து இந்திய தேசிய தொழில்நுட்ப கவுன்சிலிடம் (ஏ.ஐ.சி.டி.இ.,) விண்ணப்பித்துள்ளன.

இந்தியாவில் இன்ஜியரிங் படிப்புக்கான மவுசு இன்னமும் உச்சத்தில் இருக்கிறது. இதன் விளைவாக இன்ஜினியரிங் மற்றும் தொழில்நுட்ப கல்லுõரிகளின் எண்ணிக்கை ஆண்டுதோறும் அதிகரிக்கிறது.

அக்கல்லுõரிகளில் அனைத்து இடங்களும் நிரம்புகிறதா என்று கேட்டால் கேள்விக்குறியே. ஏனெனில், எந்தளவுக்கு கல்லுõரிகளின் எண்ணிக்கை அதிகரிக்கிறதோ, அதே அளவுக்கு காலியிடங்களும் அதிகரிக்கின்றன. இந்தாண்டு தேசிய அளவில், புதிதாக 180 இன்ஜினியரிங் கல்லுõரிகள் தொடங்குவதற்கு, ஏ.ஐ.சி.டி.இ., இடம் அனுமதி கோரி விண்ணப்பங்கள் வந்துள்ளன.

அதே நேரத்தில் 40 கல்லுõரிகள் மூடுவதற்கு அனுமதி கோரியுள்ளன. இதில் 30 கல்லுõரிகள் தமிழகத்தை சேர்ந்தவை. 2012 - 13 கல்வி ஆண்டில் தமிழகத்தில் உள்ள இன்ஜினி யரிங் கல்லுõரிகளின் எண்ணிக்கை 525 ஆக உள்ளது. இவற்றில், கடந்தாண்டு 1 லட்சத்து 50 ஆயிரம் இடங்கள் காலியாக இருந்தன.

இதில் 50 ஆயிரம் இடங்கள் அரசு ஒதுக்கீட்டு இடங்கள். 48 விதமான இன்ஜினியரிங் பாடப்பிரிவுகளில் வெறும் 10 மாணவர்களுக்கு கீழே தான் சேர்ந்துள்ளனர். இது, புதிதாக கல்லுõரி தொடங்க நினைப்பவர்களை எந்தளவுக்கும் யோசிக்க வைப்பதில்லை. கல்லுõரிகளில் அடிப்படை கட்டமைப்பு வசதிகளின் குறைவு காரணமாகவும், காலி இடங்கள் அதிகரிக்கின்றன.

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us