தினமலர்
சினிமா
டிவி
Podcast
iPaper
கோயில்கள்
புத்தகங்கள்
Subscription
திருக்குறள்
கடல் தாமரை
Dinamalar Logo

 

/செய்திகள்/கல்விமலர்/செய்திகள்/அரசு பொறியியல் கல்லூரி தனியார் நிறுவனத்துடன் ஒப்பந்தம்

அரசு பொறியியல் கல்லூரி தனியார் நிறுவனத்துடன் ஒப்பந்தம்

அரசு பொறியியல் கல்லூரி தனியார் நிறுவனத்துடன் ஒப்பந்தம்


UPDATED : பிப் 14, 2013 12:00 AM

ADDED : பிப் 14, 2013 12:35 PM

Follow on GoogleFavourite on Google

UPDATED : பிப் 14, 2013 12:00 AM ADDED : பிப் 14, 2013 12:35 PM


Follow on Google
அ நிறம் | அளவு

பர்கூரிலுள்ள அரசு பொறியியல் கல்லூரி, மாணவர் திறனை மேம்படுத்துவதற்காக சென்னையிலுள்ள கிளாஸ்லீ நிறுவனத்துடன் புரிந்துணர்வு ஒப்பந்தம் செய்துள்ளது.

தற்போதைய காலகட்டத்தில் படிக்கும் மாணவர்கள், கல்வி அறிவை தவிர்த்து வேலைக்கான போதிய செயல் திறன் மற்றும் அடிப்படை தகுதிகள் இன்றி இருக்கின்றனர். மாணவர்கள் படித்து முடித்தவுடன், சரியான வேலை வாய்ப்பை உடனடியாக பெற்றுக்கொள்ளும் விதத்தில், மாணவர்கள் தங்களுக்கு தேவையான தகுதிகளை வளர்த்து கொள்வது அவசியமாகிறது. இதற்காக பல்வேறு கல்லூரிகளும் முயற்சிகளை எடுத்து வரும் நேரத்தில் பர்கூரில் உள்ள அரசு பொறியியல் கல்லூரியும் மாணவர் பயன்பெறுவதற்காக தனியார் நிறுவனத்துடன் புரிந்துணர்வு ஒப்பந்தம் செய்துள்ளது.

கல்லூரியில் 12 ஆம் தேதி நடந்த விழாவில் அரசு பொறியியல் கல்லூரி முதல்வர் கே. சுமத்ரா அவர்களும் கிளாஸ்லீ நிறுவனத்தின் நிறுவனத் தலைவர் திரு. வைத்தியநாதனும் புரிந்துணர்வு ஒப்பந்தத்தில் கையெழுத்திட்டனர். இந்த ஒப்பந்தத்தின் படி, அடுத்த ஒரு வருடத்திற்கு இறுதியாண்டு படிக்கும் மாணவர்களுக்கு கிளஸ்லீ நிறுவனம் கல்வி, வேலை வாய்ப்பு ஆலோசனை, தேர்வுக்கான தயாரிப்பு பற்றிய தகவல்களை ஆன்லைன் மூலமாக கற்று தருவார்கள்.

விழாவில் கிளாஸ்லீ நிறுவனத்தின் திரு. வைத்தியநாதன் பேசும்போது, மாணவர்கள் தன்னம்பிக்கையை வளர்த்துக்கொள்ள வேண்டும் என்றும், படிக்கும் துறை பற்றிய ஆழமான அறிவை வளர்த்து அதனை மற்றவர் புரிந்து கொள்ளும்படி தெளிவாக விளக்க தெரிந்தால் வேலை வாய்ப்பை எளிதாக பெறலாம் என்றார்.

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us