தினமலர்
சினிமா
டிவி
Podcast
iPaper
கோயில்கள்
புத்தகங்கள்
Subscription
திருக்குறள்
கடல் தாமரை
Dinamalar Logo

 

/செய்திகள்/கல்விமலர்/செய்திகள்/சுற்றுச்சூழலில் ஆர்வமுடையவரா? அழைக்கிறது ஐஐடி

சுற்றுச்சூழலில் ஆர்வமுடையவரா? அழைக்கிறது ஐஐடி

சுற்றுச்சூழலில் ஆர்வமுடையவரா? அழைக்கிறது ஐஐடி


UPDATED : பிப் 20, 2013 12:00 AM

ADDED : பிப் 20, 2013 11:40 AM

Follow on GoogleFavourite on Google

UPDATED : பிப் 20, 2013 12:00 AM ADDED : பிப் 20, 2013 11:40 AM


Follow on Google
அ நிறம் | அளவு

சுற்றுச்சூழலில் ஆர்வமுடைய பட்டதாரிகளுக்கு இலவச பயிற்சி அளிக்க இருக்கிறது டில்லி ஐஐடி. விஞ்ஞானிகள், அறிவியலாளர்கள் மற்றும் சிறந்த கல்வி நிலையங்களின் பேராசிரியர்களைக் கொண்டு, “துருவங்களின் பருவநிலை மற்றும் கால நிலை" என்ற தலைப்பில் ஜூன் 3 முதல் 26 வரை வகுப்புகள் எடுக்கப்படும்.

மத்திய அரசாங்கத்தின் அறிவியல் மற்றும் பொறியியல் ஆராய்ச்சிக்கான நிறுவனம் சார்பாக இலவசமாக இப்பயிற்சி வகுப்பு அளிக்கப்படுகிறது. 35 வயதிற்குட்பட்ட எம்.எஸ்சி. அல்லது எம்.டெக்.,இல் இயற்பியல், புள்ளியியல், கணிதவியல், புவியியல் படித்தவர்களும், பி.டெக் அல்லது எம்.டெக்.,இல் சிவில், மெக்கானிக்கல், கெமிக்கல் படித்தவர்களும், இந்த இலவச பயிற்சி வகுப்புக்கு விண்ணப்பிக்கலாம்.

விருப்பமுடையவர்கள் மார்ச் 31-க்குள் விண்ணப்பிக்க வேண்டும். தேர்ந்தெடுக்கப்பட்டவர்கள் இரயிலில் ஏசி வகுப்பில் இலவசமாக அழைத்துச் செல்லப்படுவார்கள். மேலும் விபரங்களுக்கு என்ற www.currentscience.ac.in/Volumes/104/02/0255.pdf இணைய பக்கத்தை காணவும்.

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us