தினமலர்
சினிமா
டிவி
Podcast
iPaper
கோயில்கள்
புத்தகங்கள்
Subscription
திருக்குறள்
கடல் தாமரை
Dinamalar Logo

 

/செய்திகள்/கல்விமலர்/செய்திகள்/நியூ இந்தியா அஸ்யூரன்ஸில் டாக்டர்களுக்கான பணி வாய்ப்பு

நியூ இந்தியா அஸ்யூரன்ஸில் டாக்டர்களுக்கான பணி வாய்ப்பு

நியூ இந்தியா அஸ்யூரன்ஸில் டாக்டர்களுக்கான பணி வாய்ப்பு


UPDATED : பிப் 25, 2013 12:00 AM

ADDED : பிப் 25, 2013 12:19 PM

Follow on GoogleFavourite on Google

UPDATED : பிப் 25, 2013 12:00 AM ADDED : பிப் 25, 2013 12:19 PM


Follow on Google
அ நிறம் | அளவு

பொதுக் காப்பீட்டு நிறுவனத்துறையில் நியூ இந்தியா அஸ்யூரன்ஸ் நிறுவனத்தைப் பற்றி அறியாதவர்களே இல்லை. இந்தியாவின் பொதுத் துறை பொதுக் காப்பீட்டு நிறுவனங்கள் 4ல் நியூ இந்தியா அஸ்யூரன்ஸ் நிறுவனம் துறையின் முன்னணி நிறுவனமாக பல ஆண்டுகளாக திகழ்ந்து வருகிறது.

தனியார் துறை நிறுவனங்கள் இத்துறையில் காலெடுத்து வைத்து கிட்டத்தட்ட 10 ஆண்டுகளைக் கடந்தும் பொதுத்துறை நிறுவனமாக இருந்தாலும் தொடர்ந்து லாபகரமாக இந்த நிறுவனம் இயங்கி வருவது மற்றொரு சிறப்பு. நியூ இந்தியா அஸ்யூரன்ஸ் நிறுவனத்திற்கு நாடு முழுவதும் 1068 கிளைகள் இருப்பதும், நிறுவனத்தின் பல்வேறு நிர்வாக மட்டங்களில் சிறப்பு மற்றும் தொழில் நுட்ப தகுதி வாய்ந்த பல்வேறு பிரிவைச் சார்ந்தவர்கள் பணியாற்றுவதும் குறிப்பிடத்தக்க அம்சங்களாகும்.

இந்த நிறுவனத்தில் நிர்வாக அதிகாரி பிரிவில் உள்ள மருத்துவப் பிரிவிலான 25 காலி இடங்களை நிரப்புவதற்கான அறிவிப்பு வந்துள்ளது.

தேவைகள்: நியூ இந்தியாவின் நிர்வாக அதிகாரி பிரிவுக்கு விண்ணப்பிப்பவர்கள் 21 வயது நிரம்பியவராக இருக்க வேண்டும். மருத்துவப் பிரிவிலான எம்.பி.பி.எஸ்., பட்டப் படிப்பை முடித்திருக்க வேண்டும். மெடிக்கல் கவுன்சில் ஆப் இந்தியாவில் முறையாகப் பதிவு செய்தவராக இருக்க வேண்டும். இந்தப் பதிவு எண்ணுடன் விண்ணப்பிக்க வேண்டும். இவற்றுடன் கம்ப்யூட்டரில் பணி புரியும் திறமையும் இருந்தால் நல்லது.

மற்ற விபரங்கள்: நியூ இந்தியாவின் மேற்கண்ட நிர்வாக அதிகாரி பதவியில் மாதம் ரூ.32 ஆயிரம் ஊதியம் கிடைக்கும். இந்தப் பதவிக்கு வரும் விண்ணப்பங்கள் தகுதி அடிப்படையில் பரிசீலிக்கப்பட்டு நேர்காணலுக்கான அழைப்பு அனுப்பப்படும். நேர்காணலில் கிடைக்கும் மதிப்பெண் அடிப்படையிலேயே தேர்ச்சி இருக்கும். இந்தப் பதவிக்கு தேர்ந்து எடுக்கப்பட்டால் பிணைய ஒப்பந்தத்தில் கையெழுத்திட வேண்டியிருக்கும்.

விண்ணப்பங்களை பரிந்துரை செய்யப்பட்ட படிவ மாதிரியில் நிரப்பி பின்வரும் முகவரிக்கு 04.03.2013க்குள் கிடைக்குமாறு அனுப்ப வேண்டும். விண்ணப்பத்துடன் வயது சான்றிதழ், கல்வித் தகுதிக்கான சான்றிதழ், சாதி சான்றிதழ் போன்ற உரிய ஆவணங்களை இணைத்து உரிய விதத்தில் அனுப்ப வேண்டும். முழுமையான விபரங்களைப் பின்வரும் இணையதளத்தைப் பார்த்து அறியவும்.

முகவரி
Deputy General Manager (HR),
HRM Department,
The New India Assurance Company Ltd.,
Head Office, 87 M.G. Road,
Fort, Mumbai - 400 001.
விண்ணப்பிக்க இறுதி நாள்: 04.03.2013
இணையதள முகவரி http://newindia.co.in/Admin/Recruitments/AdvertisementAOMedical.pdf

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us