காய்கறி மற்றும் கனி மேம்படுத்தும் நிறுவனப் பணி வாய்ப்பு
காய்கறி மற்றும் கனி மேம்படுத்தும் நிறுவனப் பணி வாய்ப்பு
UPDATED : பிப் 25, 2013 12:00 AM
ADDED : பிப் 25, 2013 12:29 PM
கேரள மாநிலத்தில் காய்கறி மற்றும் கனி வளத்தை மேம்படுத்தும் நோக்கத்தோடு வெஜிடபிள் அண்டு புரூட் புரொமோஷன் கவுன்சில் கேரளம் (வி.எப்.பி.சி.கே.,) நிறுவப்பட்டது. இது ஒரு ஐ.எஸ்.ஓ., 90012000 சான்றிதழ் பெற்ற நிறுவனமாகும்.
கேரளா ஹார்டிகல்சர் டெவலப்மெண்ட் புரொகிராமின் தொடர்ச்சியாக அமைக்கப்பட்ட இந்த நிறுவனம் முற்றிலும் தொழில் நுட்ப வல்லுனர்களால் நிர்வகிக்கப்படுகிறது. இந்த நிறுவனத்தில் உள்ள உதவி மேலாளர் ( கள மையம் ) பிரிவிலான 10 காலி இடங்களை நிரப்புவதற்கான அறிவிப்பு வந்துள்ளது.
தேவைகள்: வி.எப்.பி.சி.கே., நிறுவனத்தின் அஸிஸ்டெண்ட் மேனேஜர் பதவிக்கு விண்ணப்பிப்பவர்கள் அங்கீகரிக்கப்பட்ட பல்கலைக் கழகத்தின் மூலமாக பி.எஸ்.சி., பட்டப் படிப்பை அக்ரிகல்சர் அல்லது ஹார்டிகல்சரில் முடித்திருக்க வேண்டும். விவசாயம் சார்ந்த கிராமப்புற மேம்பாட்டில் பணி அனுபவம் பெற்றவர்களுக்கு முன்னுரிமை உள்ளது.
இதர அம்சங்கள்: மாதம் ரூ.15 ஆயிரம் ஊதியம் பெறும் பதவியாகும் இது. இந்தப் பதவிக்கு விண்ணப்பிப்பவர்கள் 40 வயதுக்கு உட்பட்டவராக இருக்க வேண்டும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது. முழுமையாக பூர்த்தி செய்யப்பட்ட விபரங்களுடன் விண்ணப்பங்களைப் பின்வரும் முகவரிக்குக் 10.03.2013க்குள் கிடைக்குமாறு அனுப்ப வேண்டும்.
முகவரி
Chief Executive Officer,
Vegetable and Fruit Promotion Council Keralam,
Mythri Bhavan,
Near Doordarshan Kendra,
Kakkanad,
Kochi27
விண்ணப்பிக்க இறுதி நாள்: 10.03.2013
இணையதள முகவரி: http://jobs.freshersworld.com/jobs/VegetableandFruitPromotionCouncil/AsstManagers58925.
