தினமலர்
சினிமா
டிவி
Podcast
iPaper
கோயில்கள்
புத்தகங்கள்
Subscription
திருக்குறள்
கடல் தாமரை
Dinamalar Logo

 

/செய்திகள்/கல்விமலர்/செய்திகள்/வேலைவாய்ப்பு அலுவலகத்தில் பதிவு நேரம் குறைப்பு

வேலைவாய்ப்பு அலுவலகத்தில் பதிவு நேரம் குறைப்பு

வேலைவாய்ப்பு அலுவலகத்தில் பதிவு நேரம் குறைப்பு


UPDATED : மார் 03, 2013 12:00 AM

ADDED : மார் 03, 2013 08:11 AM

Follow on GoogleFavourite on Google

UPDATED : மார் 03, 2013 12:00 AM ADDED : மார் 03, 2013 08:11 AM


Follow on Google
அ நிறம் | அளவு

தேனி: வேலைவாய்ப்பு அலுவலகங்களில், நிர்வாக காரணங்களுக்காக சான்றிதழ்கள் பதிவு செய்யும் நேரம் குறைக்கப்பட்டுள்ளது.

மாவட்ட வேலைவாய்ப்பு அலுவலகங்களில் வேலைப்பளு அதிகமாக உள்ளதால், பதிவு, புதிப்பித்தல், முகவரி மாற்றும் மற்றும் விசாரணை குறித்த அனைத்து அலுவல்களும், பகல் 3 மணிக்குள் முடிக்கப்படும்.

அனைத்து மாவட்ட வேலை வாய்ப்பு அலுவலகங்களும், இந்த நேரத்தை கடை பிடிக்குமாறு, சென்னை வேலை வாய்ப்பு மற்றும் பயிற்சித் துறை இயக்ககம் உத்தரவிட்டுள்ளது. எனவே பதிவு செய்ய வருவோர், பகல் 3 மணிக்கு முன்னரே வந்து விட வேண்டும்,என தெரிவிக்கப்பட்டுள்ளது.

வேலைவாய்ப்பு அலுவலக அதிகாரி ஒருவர் கூறுகையில்," பணிச் சுமை,நிர்வாக காரணங்களுக்காக மட்டுமே, இந்த உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது", என்றார்.

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us