தினமலர்
சினிமா
டிவி
Podcast
iPaper
கோயில்கள்
புத்தகங்கள்
Subscription
திருக்குறள்
கடல் தாமரை
Dinamalar Logo

 

/செய்திகள்/கல்விமலர்/செய்திகள்/ஆய்வக பயிற்சியில் மாணவி காயம்: 2 பேர் மீது வழக்கு

ஆய்வக பயிற்சியில் மாணவி காயம்: 2 பேர் மீது வழக்கு

ஆய்வக பயிற்சியில் மாணவி காயம்: 2 பேர் மீது வழக்கு


UPDATED : மார் 06, 2013 12:00 AM

ADDED : மார் 06, 2013 10:52 AM

Follow on GoogleFavourite on Google

UPDATED : மார் 06, 2013 12:00 AM ADDED : மார் 06, 2013 10:52 AM


Follow on Google
அ நிறம் | அளவு

குமாரபாளையம்: ஆய்வக பயிற்சியின் போது, தனியார் இன்ஜினியரிங் கல்லூரி மாணவி ஒருவர் காயமடைந்தது தொடர்பாக, கல்லூரி லேப் டெக்னீசியன்கள் மீது குமாரபாளையம் போலீஸார் வழக்கு பதிவு செய்துள்ளனர்.

ஈரோடு, ஸ்டேட் பாங்க் காலனியை சேர்ந்தவர் கவிதா, 18. குமாரபாளையத்தில் உள்ள தனியார் கல்லூரி ஒன்றில், அவர், இரண்டாம் ஆண்டு ஏரோநாட்டிக்கல் இன்ஜினியரிங் படித்து வருகிறார். நேற்று காலை, கல்லூரி வளாகத்தில் செய்முறை பயிற்சியில், மாணவி கவிதா ஈடுபட்டிருந்தார். அப்போது, அளவீடு செய்யும் கருவி, மாணவியின் கையில் விழுந்து, விரல் நசுங்கியுள்ளது.

இது குறித்து, மாணவியின் தந்தை சின்னுசாமி, குமாரபாளையம் போலீஸில் புகார் செய்தார். புகாரின்படி, கல்லூரி லேப் டெக்னீசியன்கள் ஹரிபிரசாத், ராமலிங்கம் ஆகியோர் மீது போலீஸார் வழக்கு பதிவு செய்து, விசாரணை நடத்தி வருகின்றனர்.

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us