தினமலர்
சினிமா
டிவி
Podcast
iPaper
கோயில்கள்
புத்தகங்கள்
Subscription
திருக்குறள்
கடல் தாமரை
Dinamalar Logo

 

/செய்திகள்/கல்விமலர்/செய்திகள்/திண்டுக்கல் மருத்துவக் கல்லூரிக்கு இடம் தேர்வுப் பணி மும்முரம்

திண்டுக்கல் மருத்துவக் கல்லூரிக்கு இடம் தேர்வுப் பணி மும்முரம்

திண்டுக்கல் மருத்துவக் கல்லூரிக்கு இடம் தேர்வுப் பணி மும்முரம்


UPDATED : மார் 07, 2013 12:00 AM

ADDED : மார் 07, 2013 07:49 AM

Follow on GoogleFavourite on Google

UPDATED : மார் 07, 2013 12:00 AM ADDED : மார் 07, 2013 07:49 AM


Follow on Google
அ நிறம் | அளவு

கடந்த தி.மு.க., ஆட்சியின் கடைசி பட்ஜெட்டில், திண்டுக்கல் மாவட்டத்தில் மருத்துவக் கல்லூரி அமைக்கப்படும் என, அறிவிக்கப்பட்டது. அதன்பிறகு ஆட்சி மாற்றம் ஏற்பட்டதால், மருத்துவக் கல்லூரி துவக்கும் பணிகள் கிடப்பில் போடப்பட்டது.

இந்நிலையில், தற்போது திண்டுக்கல் மாவட்டத்தில் மருத்துவக் கல்லூரி அமைக்க, ஒரே இடத்தில் 100 ஏக்கர் அரசு புறம்போக்கு நிலம் உள்ளதா என, கண்டறியும் பணியில் தாசில்தார்கள் ஈடுபட்டுள்ளனர்.

இதற்கிடையில், 320 படுக்கை வசதிகொண்ட திண்டுக்கல் அரசு மருத்துவமனையை, விரிவுபடுத்தி மேலும் 300 படுக்கைகளுடன் மருத்துவக் கல்லூரி மருத்துவமனையாக மாற்றும் பணிகளும் தற்போது துவங்கியுள்ளன.

இதற்காக, கூடுதல் டாக்டர்கள், செவிலியர்கள், பணியாளர்களை நியமிக்க, அரசின் ஒப்புதல் கேட்கப்பட்டுள்ளது. திண்டுக்கல்லில் மருத்துவக்கல்லூரி அமைந்தால், இங்கிருந்து மேல் சிகிச்சைக்காக, மதுரை ராஜாஜி அரசு மருத்துவமனை, தேனி மருத்துவக் கல்லூரி மருத்துவமனைகளுக்கு நோயாளிகள் அனுப்பப்படுவது தவிர்க்கப்படும்.

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us