UPDATED : மார் 07, 2013 12:00 AM
ADDED : மார் 07, 2013 09:56 AM
சேலம்: தாரமங்கலத்தில், 12வது ஐந்தாண்டு திட்டத்தில், ஆசிரியர்களின் தரம் உயர்த்துதல் சம்மந்தமான தேசிய கருத்தரங்கு, செங்குந்தர் கல்வியியல் கல்லூரியில், 9, 10 தேதிகளில் நடக்க உள்ளது.
இக்கருத்தரங்கை, தமிழ்நாடு மாநில மைய ஆசிரியர் கல்வி நிறுவனமும், காரைக்குடி அழகப்பா பல்கலைக்கழக கல்வியியல் துறையும் கூட்டாக இணைந்து நடத்துகிறது.
செங்குந்தர் கல்வி கழக தலைவர் டாக்டர் சுப்ரமணியம், கருத்தரங்கை துவக்கி வைக்கிறார். அழகப்பா பல்கலைக்கழக கல்வியியல்துறை தலைவர் டாக்டர் பால்தேவநேசன், செங்குந்தர் கல்வியியல் கல்லூரி முதல்வர் உஷா ஆகியோர் முன்னிலை வகிக்கின்றனர்.
பேராசிரியர்கள் சர்மா, டாக்டர் மால்வியா, ரேணு ஸ்ரீ வாத்ஸ்தவா, பெனிடிக், டாக்டர் அன்வர் ஆகியோர் கலந்து கொண்டு பேச உள்ளனர். 12க்கும் மேற்பட்ட துணைத்தலைப்புகளில், ஆசிரியர்களும், ஆராய்ச்சி மாணவர்களும், கல்வியியல் கல்லூரி மாணவர்களும் தங்களுடைய ஆராய்ச்சி கட்டுரைகளை சமர்ப்பிக்கின்றனர்.
