தினமலர்
சினிமா
டிவி
Podcast
iPaper
கோயில்கள்
புத்தகங்கள்
Subscription
திருக்குறள்
கடல் தாமரை
Dinamalar Logo

 

/செய்திகள்/கல்விமலர்/செய்திகள்/சட்டக் கல்லூரி முதல்வர் நியமனம் எதிர்த்த மனு தள்ளுபடி

சட்டக் கல்லூரி முதல்வர் நியமனம் எதிர்த்த மனு தள்ளுபடி

சட்டக் கல்லூரி முதல்வர் நியமனம் எதிர்த்த மனு தள்ளுபடி


UPDATED : மார் 07, 2013 12:00 AM

ADDED : மார் 07, 2013 10:14 AM

Follow on GoogleFavourite on Google

UPDATED : மார் 07, 2013 12:00 AM ADDED : மார் 07, 2013 10:14 AM


Follow on Google
அ நிறம் | அளவு

சென்னை: சென்னை, சட்டக் கல்லூரி முதல்வரின் நியமனத்தை எதிர்த்து, தாக்கல் செய்த மனுவை, சென்னை ஐகோர்ட் தள்ளுபடி செய்தது. விருத்தாசலத்தைச் சேர்ந்த, வழக்கறிஞர் மாயா மணிகண்டன் என்பவர், தாக்கல் செய்த மனு: சென்னை, சட்டக் கல்லூரி முதல்வராக, நாராயண பெருமாள் பணியாற்றி வருகிறார். இதற்கு முன், மதுரை சட்டக் கல்லூரியின் முதல்வராக, 2011ம் ஆண்டு, பதவி உயர்வு அளிக்கப்பட்டு நியமிக்கப்பட்டார். முதல்வர் பதவி வகிக்க, யு.ஜி.சி., வகுத்துள்ள தகுதிகளை இவர் பூர்த்தி செய்யவில்லை.

கல்லூரி முதல்வராக பதவி உயர்வு பெற்ற நாளன்று, பி.எச்.டி., பட்டம் பெற்றிருக்கவில்லை. முதல்வர் பதவியில் தொடர, இவருக்குத் தகுதி இல்லை. எனவே, எந்த அடிப்படையில் பதவியில் தொடருகிறார் என, அவரிடம் விளக்கம் கேட்க வேண்டும். இவ்வாறு, மனுவில் கூறப்பட்டுள்ளது.

அரசு தரப்பில் தாக்கல் செய்யப்பட்ட பதில் மனுவில், "யு.ஜி.சி., விதிமுறைகளின்படி, முதல்வர் பதவிக்கு நிர்ணயிக்கப்பட்ட தகுதியை நாராயண பெருமாள் பெற்றுள்ளார். 24 ஆண்டுகள் அனுபவம் உள்ளது. சென்னை, சட்டக்கல்லூரி முதல்வராக பதவியேற்கும் போது, பி.எச்.டி., பட்டம் பெற்றுள்ளார்&' என, கூறப்பட்டு உள்ளது. மனுவை, நீதிபதி சந்துரு விசாரித்தார். அரசு தரப்பில், சிறப்பு அரசு பிளீடர் சுப்பையா ஆஜரானார்.

நீதிபதி சந்துரு பிறப்பித்த உத்தரவு: முதல்வராக பதவி உயர்வு பெற்று, மதுரை, சட்டக் கல்லூரி முதல்வராக நாராயணபெருமாள் நியமிக்கப்பட்ட போது, வழக்கு தொடரப்படவில்லை. அப்போது கூட, மாநில அரசு வகுத்துள்ள இடைக்கால விதிகளின்படி, அவருக்கு பதவி உயர்வு வழங்கப்பட்டது. அந்த விதிகளை எதிர்த்து, யாரும் வழக்கு தொடரவில்லை. மனுதாரரைப் பொறுத்தவரை, ஒரு வழக்கறிஞர். கல்லூரி முதல்வர் பதவிக்கு போட்டியிடவில்லை. சட்டக் கல்லூரி முதல்வர்கள் பலருக்கு, அளிக்கப்பட்ட பதவி உயர்வை எதிர்த்து, வழக்கு தாக்கல் செய்யப்பட்டபோது, நாராயணபெருமாளின் பதவி உயர்வை எதிர்த்து, மனுதாரர் வழக்கு தாக்கல் செய்யவில்லை. மதுரையில் இருந்து சென்னை, சட்டக் கல்லூரிக்கு மாற்றம் செய்யப்பட்டுள்ளார். தற்போதுள்ள பதவியை எதிர்த்துதான் வழக்கு தாக்கல் செய்துள்ளார். விதிகளின்படி, நாராயணபெருமாளுக்கு, தகுதி உள்ளது. மதுரை, சட்டக் கல்லூரி முதல்வராக பதவி உயர்வு அளித்ததை எதிர்த்து ஏன் வழக்கு தொடரவில்லை என்பதற்கு மனுதாரர் விளக்கம் அளிக்கவில்லை. மனு, தள்ளுபடி செய்யப்படுகிறது. இவ்வாறு, நீதிபதி சந்துரு உத்தரவிட்டுள்ளார்.

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us