தினமலர்
சினிமா
டிவி
Podcast
iPaper
கோயில்கள்
புத்தகங்கள்
Subscription
திருக்குறள்
கடல் தாமரை
Dinamalar Logo

 

/செய்திகள்/கல்விமலர்/செய்திகள்/மொபைல் வெளிச்சத்தில் படிப்போம் - மின்வெட்டால் தேர்வர்கள் அவதி

மொபைல் வெளிச்சத்தில் படிப்போம் - மின்வெட்டால் தேர்வர்கள் அவதி

மொபைல் வெளிச்சத்தில் படிப்போம் - மின்வெட்டால் தேர்வர்கள் அவதி


UPDATED : மார் 07, 2013 12:00 AM

ADDED : மார் 07, 2013 02:46 PM

Follow on GoogleFavourite on Google

UPDATED : மார் 07, 2013 12:00 AM ADDED : மார் 07, 2013 02:46 PM


Follow on Google
அ நிறம் | அளவு

ஈரோடு: ஈரோடு மாவட்டத்தில் இரவு நேரத்தில் அதிகப்படியாக மின்தடை ஏற்படுவதால், பிளஸ் 2 தேர்வர்கள் படிக்க பெறும் அவதியுறுகின்றனர்.

ஈரோடு மாவட்டத்தில், பிளஸ் 2 பொதுத்தேர்வை, 183 பள்ளியை சேர்ந்த, 27 ஆயிரத்து, 998 பேர் இத்தேர்வை எழுதி வருகின்றனர். மூன்றாவது தேர்வான, ஆங்கிலம் முதல் தாள் தேர்வு நேற்று நடந்தது. நேற்றைய தேர்வு எளிதாக இருந்தாலும், மின்தடையால் சரியாக படிக்க முடியவில்லை என ஈரோடு அரசு பெண்கள் மேல்நிலைப்பள்ளி மாணவிகள் தெரிவித்தனர்.

சவுமியா: ஆங்கிலம் முதல் தாளில் கேட்கப்பட்ட அனைத்து கேள்வியும் எளிதாக இருந்தது. 100க்கு, 80 மார்க் வாங்குவேன்.
சங்கீதா: ஒரு மார்க், பெரிய கேள்விகள் என அனைத்தும் எளிதாக இருந்தது.
சோபியா: நான் ஈரோடு மூலப்பாளையம் பகுதியில் இருந்து வருகிறேன். எங்கள் பகுதியில் தினமும் இரவு, 7 முதல், 8 மணி வரையும், காலையிலும் மின்தடை அமலில் உள்ளது. தவிர இரவில் எந்நேரமும் மின்தடை ஏற்படுகிறது. இதனால் தேர்வு சமயத்தில் படிக்க முடியவில்லை. மொபைல்ஃபோன் வெளிச்சத்தில் படிக்கிறோம். என்னைப்போல, பல மாணவிகள் இதேபோன்ற மின்தடையால் பாதித்துள்ளனர்.

இந்து: நானும், மூலப்பாளையத்தில் இருந்து இப்பள்ளியில் படிக்கிறேன். 100க்கு, 70 மார்க் நிச்சயம் எடுப்பேன்.
எங்கள் பகுதியில் இரவு, 7 முதல், 8 மணி வரையும், 9 முதல், 10 மணி வரையும், அதிகாலை, 6 முதல், 7 மணி வரை மின் தடை ஏற்படுகிறது. மெழுகுவர்த்தி வெளிச்சத்ததை நம்பி படிக்கிறோம்.
தாரணி: நான் சங்கு நகர் பகுதியில் இருந்து வருகிறேன். எங்கள் பகுதியில் தினமும் இரவு, 9 முதல், 10 மணி வரையும், இரவு 11 மணிக்கு மேலும் மின்தடை அமலில் உள்ளது. இதனால் படிக்க முடியாமல் அவதியுறுகிறோம். ஆங்கிலம் முதல் தாளில் 100க்கு, 80 மார்க் வரும் என எதிர்பார்க்கிறேன்.

தேர்வு நேரத்தில் மின்தடை இல்லாமல் பார்த்துக்கொள்ளும் மின்வாரியம், தேர்வு முடியும் வரை இரவு நேரத்தில் தடையற்ற மின்சாரம் வழங்கவும் நடவடிக்கை எடுக்க வேண்டும், என மாணவிகள் எதிர்பார்க்கின்றனர்.

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us