தினமலர்
சினிமா
டிவி
Podcast
iPaper
கோயில்கள்
புத்தகங்கள்
Subscription
திருக்குறள்
கடல் தாமரை
Dinamalar Logo

 

/செய்திகள்/கல்விமலர்/செய்திகள்/மதுரை கல்லூரி மாணவிகளுக்கு பெப்பர் ஸ்பிரே வழங்கிய காவல்துறை

மதுரை கல்லூரி மாணவிகளுக்கு பெப்பர் ஸ்பிரே வழங்கிய காவல்துறை

மதுரை கல்லூரி மாணவிகளுக்கு பெப்பர் ஸ்பிரே வழங்கிய காவல்துறை


UPDATED : மார் 09, 2013 12:00 AM

ADDED : மார் 09, 2013 08:23 AM

Follow on GoogleFavourite on Google

UPDATED : மார் 09, 2013 12:00 AM ADDED : மார் 09, 2013 08:23 AM


Follow on Google
அ நிறம் | அளவு

மதுரை: ஈவ்டீசிங் செய்யும் ரோமியோக்களையும், நகை பறிக்கும் திருடர்களையும் "கண்கலங்க" வைக்க, கல்லூரி மாணவியருக்கு மதுரை போலீசார் இலவசமாக "பெப்பர் ஸ்பிரே" வழங்கியுள்ளனர்.

மகளிர் தினத்தையொட்டி, மதுரையில் நேற்று கல்லூரி மாணவியர் மற்றும் பேராசிரியைகளுடன் மாவட்ட எஸ்.பி., பாலகிருஷ்ணன் கலந்துரையாடினார். பெண்கள் பாதுகாப்பு தொடர்பான சந்தேகங்களுக்கு பதில் அளித்தார்.

மாணவியர் தினமும் சந்திக்கும் பிரச்னைகள் குறித்தும், அதற்குரிய தீர்வுகளும் குறித்து தெரிவிக்கப்பட்டது. இதில், மதுரை, விருதுநகர் மாவட்டங்களை சேர்ந்த 8 கல்லூரிகளை சேர்ந்தவர்கள் பங்கேற்றனர்.

அவர்களுக்கு போலீஸ் சார்பில் இலவச "பெப்பர் ஸ்பிரே" கருவிகள் வழங்கப்பட்டன. பாலகிருஷ்ணன் எஸ்.பி., கூறுகையில், "வீட்டில் தனியாக இருக்கும் பெண்கள், திருடர்களில் இருந்து தப்பிக்கவும், நகைபறிப்பை தடுக்கவும் இது உதவும். ஈவ்டீசிங் பிரச்னைகளையும் தடுக்க முடியும்" என்றார்.

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us