தினமலர்
சினிமா
டிவி
Podcast
iPaper
கோயில்கள்
புத்தகங்கள்
Subscription
திருக்குறள்
கடல் தாமரை
Dinamalar Logo

 

/செய்திகள்/கல்விமலர்/செய்திகள்/விளையாட்டு மைதானத்தில் கழிவுநீர்: மாணவர்கள் அவதி

விளையாட்டு மைதானத்தில் கழிவுநீர்: மாணவர்கள் அவதி

விளையாட்டு மைதானத்தில் கழிவுநீர்: மாணவர்கள் அவதி


UPDATED : மார் 10, 2013 12:00 AM

ADDED : மார் 10, 2013 08:43 AM

Follow on GoogleFavourite on Google

UPDATED : மார் 10, 2013 12:00 AM ADDED : மார் 10, 2013 08:43 AM


Follow on Google
அ நிறம் | அளவு

கிருஷ்ணகிரி நகரின் மையப்பகுதியில், அரசு ஆண்கள் மேல்நிலைப்பள்ளி உள்ளது. பழமை வாய்ந்த இந்த பள்ளியின் விளையாட்டு மைதானம் பத்து ஏக்கர் நிலத்தில் இருந்தது. மைதானத்தில் ஆண்டுதோறும் அகில இந்திய மாங்கனி கண்காட்சி நடக்கும். அரசு சார்பில் பல்வேறு விழாக்களும் இந்த மைதானத்தில் நடத்தப்படுகிறது.

மாவட்ட அளவிலான, மாநில அளவிலான விளையாட்டு போட்டிகளும் இங்கு நடத்தப்படுகிறது. இங்கு காலை மற்றும் மாலை நேரங்களில் ஆண்களும், பெண்களும் நடைபயிற்சி மேற்கொள்வார்கள்.மேலும், விடுமுறை நாட்களில் மாணவர்கள் நாள் முழுவதும் கிரிக்கெட் மற்றும் வாலிபால், கால்பந்து போன்ற விளையாட்டுகளை விளையாடி வருகிறார்கள்.

கடந்த நான்கு ஆண்டுக்கு முன் மைதானத்தில் அரசு ஆதிதிராவிடர் நல மாணவியர் விடுதி கட்டப்பட்டது. இரண்டு ஆண்டுக்கு முன் விடுதி அருகே அரசு பிற்படுத்தப்பட்டோர் நல விடுதியும் கட்டப்பட்டது.

இதனால், விளையாட்டு மைதானம் சுருங்கி வருவதாக கூறியும் இதற்கு மேலும் விளையாட்டு மைதானத்தில் எந்த கட்டிடங்களையும் கட்ட கூடாது என பொதுமக்கள் வேண்டுகோள் விடுத்துள்ளனர்.

பிற்படுத்தப்பட்டோர் நல விடுதியில், கல்லூரி மற்றும் பள்ளிகளில் படிக்கும் 75க்கும் மேற்பட்ட மாணவிகள் தங்கியுள்ளனர். விடுதியில் இருந்து வெளியேறும் கழிவுநீரை தேக்கி வைக்க செப்டிக் டேங்க் கட்டாத நிலையில் விடுதிக்கு அருகே விளையாட்டு மைதானத்தில் பள்ளம் தோண்டி கழிவு நீர் தேக்கி வைக்கப்படுகிறது.

கடந்த சில நாட்களாக கழிவு நீர் தேக்கி வைக்கப்பட்டுள்ள பள்ளத்தில் உடைப்பு ஏற்பட்டு விளையாட்டு மைதானம் முழுவதும் கழிவு நீர் வழிந்து ஓடுகிறது. காலை நேரத்தில் விளையாட்டு மைதானத்தில் கழிவு நேர் ஓடுவதால் அந்த பகுதியில் நடைபயிற்சிக்கு வருவோர் மற்றும் மாணவர்கள் கடும் அவதிக்குள்ளாகி வருகின்றனர்.

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us