கால்நடை மருத்துவ அறிவியல் பல்கலை திட்டங்களின் நிலை என்ன?
கால்நடை மருத்துவ அறிவியல் பல்கலை திட்டங்களின் நிலை என்ன?
UPDATED : மார் 11, 2013 12:00 AM
ADDED : மார் 11, 2013 08:29 AM
கால்நடை பராமரிப்பு துறையின் கீழ், கால்நடை மருத்துவ பல்கலைக் கழகம் செயல்பட்டு வருகிறது. கால்நடை குறித்த, படிப்புகளைவழங்குதல், பண்ணையாளர்கள், விவசாயிகளுக்கு, கால்நடை பாதுகாப்பு குறித்து விழிப்புணர்வு நிகழ்ச்சிகள் நடத்தப்படுகிறது.
கால்நடை பல்கலை மூலம், 10 திட்டங்கள் செயல்படுத்தும்அறிவிப்பு, 2012-13 பட்ஜெட்டில் அறிவிக்கப்பட்டது. பண்ணையாளர்கள், விவசாயிகள், தொழில் முனைவோரிடம், கால்நடை வளர்ப்பு குறித்த, விழிப்புணர்வை ஏற்படுத்த, மண்டல அளவிலான கால்நடை கண்காட்சி நடத்த, ஒரு கோடி ரூபாய் ஒதுக்கீடு செய்யப்பட்டது.கண்காட்சி, ஏழு மாவட்டங்களில் நடத்த திட்டமிடப்பட்டு, கோவை, நெல்லை, திருச்சியில் மட்டும் நடந்து முடிந்துள்ளது.
சிறு விலங்குகளுக்கான நோய்களை கண்டறிதல், மனிதன், விலங்கு களுக்கு இடையே நோய் பரவுதல் உள்ளிட்ட பாடத்தில், முதுகலை பட்டய வகுப்புகள், ஆன்-லைனில் வழங்க உள்ளதாக அரசு அறிவித்தது. இத்திட்டம் அடுத்தாண்டு தான், நடைமுறைக்கு வரும் என, எதிர்பார்க்கப்படுகிறது.விவசாயிகள், மீன் வளர்ப்பு தொழிலில் உள்ளோர் பயன்பெறும் வகையில், கிருஷ்ணகிரியில் உள்ள பாரூரில், 1.53 லட்ச ரூபாய்செலவில், மண்டல மீன்வள ஆராய்ச்சி மையம், மணிமங்கலத்தில், 1.46 லட்ச ரூபாய் செலவில், மீன்வள ஆராய்ச்சி மையம் அமைய உள்ளது.
இதேபோல், சிறுசேரியில், 60 லட்சம் ரூபாய் செலவில், மீன் தொழில்நுட்ப ஆராய்ச்சி மையம், பொன்னேரியில், 34.08 கோடி ரூபாய் செலவில், மீன்வள தொழில் நுட்ப பயிற்சி மையம் அமைய உள்ளது.தற்போது, இம்மையங்களுக்கான, இடம் தேர்வு பணிகள் நடந்து வருகின்றன.ராஜபாளையம், சிப்பிப்பாறை, கோம்பை மற்றும் கன்னி இன நாய்களின் இனப்பெருக்கம் மற்றும் வெளிநாட்டு நாய்களின் இனப்பெருக்கத்தை மேற்கொள்ள நாய் இனப்பெருக்க மையம் அமைய உள்ளது.இதற்காக, பிற அமைப்புகளிடம் நிதியுதவி கோரப்பட்டுள்ளது.
