தினமலர்
சினிமா
டிவி
Podcast
iPaper
கோயில்கள்
புத்தகங்கள்
Subscription
திருக்குறள்
கடல் தாமரை
Dinamalar Logo

 

/செய்திகள்/கல்விமலர்/செய்திகள்/மேலாண்மை படிப்புகளுக்கு சர்வதேச அளவில் நல்ல வரவேற்பு

மேலாண்மை படிப்புகளுக்கு சர்வதேச அளவில் நல்ல வரவேற்பு

மேலாண்மை படிப்புகளுக்கு சர்வதேச அளவில் நல்ல வரவேற்பு


UPDATED : மார் 11, 2013 12:00 AM

ADDED : மார் 11, 2013 05:05 PM

Follow on GoogleFavourite on Google

UPDATED : மார் 11, 2013 12:00 AM ADDED : மார் 11, 2013 05:05 PM


Follow on Google
அ நிறம் | அளவு

ஆண்டுதோறும் "தினமலர்" நாளிதழ் சார்பில், பத்தாம் வகுப்பு, பிளஸ் 2 மாணவர்களுக்கான, ஜெயித்துக் காட்டுவோம், வழிகாட்டி, பட்டப்படிப்பு படிக்கும் மற்றும் முடித்த மாணவர்களுக்கு, வணிக மேலாண்மை மேற்படிப்புக்கான வழிகாட்டும் கேட்வே பி ஸ்கூல்ஸ் என்ற நிகழ்ச்சியும் நடத்தப்படுகிறது. இந்நிகழ்ச்சிகளில், துறை சார்ந்த ஆசிரியர்கள், வல்லுனர்கள் மாணவ, மாணவியருக்கு, ஆலோசனை வழங்கி வருகின்றனர்.

இந்த ஆண்டுக்கான, வணிக மேலாண்மை மேற்படிப்புக்கான (கேட்வே பி ஸ்கூல்ஸ்) வழிகாட்டுதல் நிகழ்ச்சி, தினமலர் நாளிதழ் மற்றும் பார்க் குளோபல் கல்வி நிறுவனங்கள் சார்பில், கோவை, ஆவராம்பாளையம் ரோடு, ராமகிருஷ்ணா திருமண மண்டபத்தில், நடந்தது. பார்க் கல்வி நிறுவனங்களின் முதன்மை செயல் அலுவலர் அனுஷா தலைமை வகித்து பேசியதாவது: வாழ்க்கையின் முக்கியமான முடிவை எடுக்கும் தருணத்தில் உள்ளீர்கள். மேலாண்மை படிப்புகளில், எம்.பி.ஏ., மற்றும் பி.ஜி.டி.எம்., என இரு பிரிவுகள் உள்ளன. இத்துறைகளில் சர்வதேச அளவில் வேலைவாய்ப்புகள் உள்ளன. உலகமயமாக்கலால் உலகின் ஏதோ ஒரு இடத்தில் நடக்கும் நிகழ்வுகள் உங்களை எளிதாக வந்தடைகிறது.

மேலாண்மை படிப்புகளுக்கு உலகளாவிய வரவேற்பு உள்ளது. மேலாளர்களை உருவாக்குவது மட்டுமே மேலாண்மை படிப்பின் நோக்கமாக இருக்கக் கூடாது. மாறாக, சிறந்த தலைமை பண்பு உடையவர்களை உருவாக்குவதாக இருக்க வேண்டும். கடின உழைப்புக்கு, மாற்றாக ஏதும் இல்லை. இவ்வாறு, அனுஷா பேசினார்.

கருத்தரங்கில் "ஏன் எம்.பி.ஏ.," எனும் தலைப்பில், கேலக்ஸி மேலாண்மை கல்லூரி இயக்குனர், ரமேஷ் பிரபா பேசியதாவது: கடந்த 2006-07ம் கல்வி ஆண்டில், 1,132 கல்வி நிறுவனங்கள் மூலம் 94 ஆயிரத்து 704 மாணவர்கள் எம்.பி.ஏ., படித்தனர். சென்ற கல்வி ஆண்டில்(2011-12) 2,450 கல்வி நிறுவனங்கள் மூலம் 3.85 லட்சம் மாணவர்கள் எம்.பி.ஏ., முடித்துள்ளனர். தென்னிந்தியாவில்தான் அதிகளவு எம்.பி.ஏ., கல்லூரிகள் உள்ளன.

எம்.பி.ஏ., படிப்பில் மார்க்கெட்டிங், பைனான்ஸ், மனித வளம், சிஸ்டம்ஸ், ஆப்ரஷேனல் ரிசர்ச் என, பொதுவான பிரிவுகள் உள்ளன. எம்.பி.ஏ., படிக்க விரும்பும் மாணவர்கள் சந்தையில் உள்ள தேவைக்கேற்ப பாடப்பிரிவை தேர்ந்தெடுக்க வேண்டும். எம்.பி.ஏ., படிப்பதால் மாணவர்களுக்கு சிறந்த எதிர்காலம் உள்ளது. மேலாண்மை துறையில் உள்ள எம்.பி.ஏ., மற்றும் பி.ஜி.டி.எம்., படிப்புகள் இரண்டுக்கும் அதிகமான வேறுபாடுகள் இல்லை. எம்.பி.ஏ., படிக்கும் மாணவர்களுக்கு, கார்ப்பரேட் நிறுவனங்களில் நல்ல வரவேற்பு உள்ளது.

சிறந்த ஊதியம், வாழ்க்கை முறை மாற்றம், தலைமை பண்பு உள்ளிட்டவை வளர வழி வகுக்கிறது. மாணவர்களிடையே உள்ள தயக்கத்தை விட வேண்டும். தயக்கம் முன்னேற்றத்துக்கு தடையாக இருக்கும். இவ்வாறு, ரமேஷ் பிரபா பேசினார்.

பல்வேறு நுழைவு தேர்வுகள் மற்றும் அவற்றுக்கு தயாராவது குறித்து, டி.ஐ.எம்.இ., நிறுவன கோவை கிளை இயக்குனர் சுப்ரமணியம் பேசியதாவது: தொழில்துறை தற்போது பல்வேறு பிரச்னைகளை சந்தித்து வருகிறது. நிலையற்ற பொருளாதாரம், வேலை பளு, பணி பாதுகாப்பின்மை, ஊதியக் குறைப்பு உள்ளிட்ட பல பிரச்னைகளை பணியாளர்கள் சந்தித்து வருகின்றனர்.

மேலாண்மை துறைக்கு வர விரும்புவோர் மற்றவர்களிடமிருந்து தன்னை வேறுபடுத்திக் காட்ட வேண்டும். ஆண்டுதோறும் இந்தியாவில் மூன்று லட்சம் மாணவர்கள் மேலாண்மை படிப்புக்கான நுழைவுத் தேர்வுகளை எழுதுகின்றனர். எம்.பி.ஏ., மற்றும் பி.ஜி.டி.எம்., படிப்புக்களுக்கு, ஜிமேட், கேட், மேட், எக்ஸ். ஏ.டி., சிமேட், அட்மா, டான்செட் என, பல்வேறு நுழைவுத் தேர்வுகள் உள்ளன. இந்த தேர்வுகளில் தவறான பதில்களுக்கு மதிப்பெண் குறைக்கப்படும் என்பதால்("மைனஸ்" மார்க்), தெரிந்த சரியான பதிலை எழுதுவதே சிறந்தது. முந்தைய ஆண்டுகளின் "கட் ஆப்" மார்க் குறித்து தெரிந்து, தேர்வு எழுதும்போது தேவைக்கு அதிகமாக விடையளிப்பதை தவிர்க்கலாம். நேர மேலாண்மையை பின்பற்றுவது சிறந்தது. இவ்வாறு, சுப்ரமணியம் பேசினார்.

எம்.பி.ஏ., படிப்புக்கு பின் உள்ள வேலைவாய்ப்புகள் குறித்து, கிரேட் லேக்ஸ் இன்ஸ்டிடியூட்டின் அட்மிஷன் இயக்குனர் ஈஸ்வர் கிருஷ்ண ஐயர் பேசியதாவது: சிந்தித்து செயல்படுவதால், உயர்ந்த நிலையை அடையலாம். எம்.பி.ஏ., படிப்பதால், மாணவர்களுக்கு பல்வேறு துறைகளிலும் வேலைவாய்ப்பு உள்ளது. மார்க்கெட்டிங், பைனான்ஸ் உள்ளிட்ட துறைகள் மட்டுமல்லாது சிஸ்டம்ஸ், மனிதவளம் உள்ளிட்ட பல துறைகளிலும் உலகளவில் வாய்ப்புகள் குவிந்துள்ளன. படிக்கும் காலத்தில் அவசரமின்றி தெளிவாக நடந்தால் வெற்றி நிச்சயம். மற்றவர்களிடமிருந்து வேறுபட்டு புதுமையாக சிந்திப்பது நல்லது. மற்றவர்களுடன் தொடர்பை வளர்த்துக் கொள்ள வேண்டும். இவ்வாறு, ஈஸ்வர் கிருஷ்ண ஐயர் பேசினார்.

சிறந்த கல்வி நிறுவனங்களை தேர்ந்தெடுப்பது குறித்து, ஆர்.எல்., மேலாண்மை கல்வி நிறுவனத்தின் இயக்குனர்(பொறுப்பு) ஸ்ரீராம் பேசியதாவது: எம்.பி.ஏ., மற்றும் பி.ஜி.டி.எம்., படிக்க விரும்புவோர், ஏ.ஐ.சி. டி.இ., அங்கீகாரம் பெற்ற கல்வி நிறுவனங்களை தேர்ந்தெடுத்து அவற்றில் கல்வி கற்பது நல்லது. கல்வி நிறுவனங்களின் உள்கட்டமைப்பு, அமைவு இடம் உள்ளிட்டவை குறித்தும் தெரிந்துகொள்ள வேண்டும். கல்லூரியில் உள்ள ஆய்வகம், நூலகம் உள்ளிட்ட பல்வேறு வசதிகள் குறித்தும் அறிந்து கொள்ள வேண்டும். முந்தைய ஆண்டுகளில் கல்லூரியில் நடத்தப்பட்ட வேலைவாய்ப்பு முகாம்கள், அதில் பங்குபெற்ற நிறுவனங்கள் உள்ளிட்ட பல்வேறு தகவல்களை சேகரிப்பது அவசியம். இவ்வாறு, ஸ்ரீராம் பேசினார்.

வெளிநாட்டு கல்லூரிகளில் உள்ள எம்.பி.ஏ., படிப்பு குறித்து குளோபல் ரீச் நிறுவனத்தின் தலைவர், சபேசன் மாணிக்கவாசகம் பேசுகையில், "இந்திய கல்வி முறை ஆங்கிலேயர்களிடமிருந்து பெறப்பட்டது. தற்போதுவரை அதில் எந்த மாற்றமும் செய்யப்படவில்லை. தாராளமயமாக்கல், கல்வி முறையில் கொண்டு வரப்பட வேண்டும். இன்றைய கல்விமுறை முற்றிலும் மாற வேண்டும். வெளிநாட்டில் எம்.பி.ஏ., படிப்பதால், உலகளாவிய வரவேற்பு இருக்கும்'' என்றார். நிகழ்ச்சியில் பங்கேற்ற மாணவர்களுக்கு விளக்கக் கையேடு இலவசமாக வழங்கப்பட்டது.

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us