தினமலர்
சினிமா
டிவி
Podcast
iPaper
கோயில்கள்
புத்தகங்கள்
Subscription
திருக்குறள்
கடல் தாமரை
Dinamalar Logo

 

/செய்திகள்/கல்விமலர்/செய்திகள்/ஓய்வு பெற்றார் நடராஜ்: புதிய தலைவர் இன்று பதவியேற்பு

ஓய்வு பெற்றார் நடராஜ்: புதிய தலைவர் இன்று பதவியேற்பு

ஓய்வு பெற்றார் நடராஜ்: புதிய தலைவர் இன்று பதவியேற்பு


UPDATED : மார் 13, 2013 12:00 AM

ADDED : மார் 13, 2013 07:26 AM

Follow on GoogleFavourite on Google

UPDATED : மார் 13, 2013 12:00 AM ADDED : மார் 13, 2013 07:26 AM


Follow on Google
அ நிறம் | அளவு

கடந்த ஆண்டு, ஜனவரி, 23ம் தேதி, தேர்வாணைய தலைவராக, நடராஜ் பதவி ஏற்றார். தேர்வாணையத்தில், தலைவர் மற்றும் உறுப்பினர்கள் பதவிக்காலம், 62 வயது அல்லது ஆறு ஆண்டுகள் என, நிர்ணயிக்கப்பட்டுள்ளது. நிர்ணயித்த வயது வரம்பை நடராஜ் எட்டியதால், இன்றுடன், அவரது பதவிக்காலம் முடிந்தது.

நேற்று காலை, தமிழ்நாடு திறந்தநிலை பல்கலை பட்டமளிப்பு விழாவில், சிறப்பு விருந்தினராக நடராஜ் கலந்துகொண்டார். அதன்பின், பிற்பகலில், வழக்கம்போல், அலுவலக பணிகளை கவனித்துவிட்டு, மாலையில், தலைவர் பதவியில் இருந்து விடை பெற்றார். அவருக்கு, தேர்வாணைய உறுப்பினர்கள், பணியாளர்கள் வாழ்த்து தெரிவித்தனர்.

பணியில், தனக்கு ஒத்துழைப்பு அளித்த அனைவருக்கும், நடராஜ் நன்றி தெரிவித்தார்.புதிய தலைவராக நியமிக்கப்பட்டு உள்ள நவநீதகிருஷ்ணன், நாளை காலை, 10:30க்கு, பதவி ஏற்கிறார்.

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us