தினமலர்
சினிமா
டிவி
Podcast
iPaper
கோயில்கள்
புத்தகங்கள்
Subscription
திருக்குறள்
கடல் தாமரை
Dinamalar Logo

 

/செய்திகள்/கல்விமலர்/செய்திகள்/ஐ.ஏ.எஸ்., புதிய தேர்வு முறை: கருணாநிதி, வைகோ வலியுறுத்தல்

ஐ.ஏ.எஸ்., புதிய தேர்வு முறை: கருணாநிதி, வைகோ வலியுறுத்தல்

ஐ.ஏ.எஸ்., புதிய தேர்வு முறை: கருணாநிதி, வைகோ வலியுறுத்தல்


UPDATED : மார் 13, 2013 12:00 AM

ADDED : மார் 13, 2013 07:35 AM

Follow on GoogleFavourite on Google

UPDATED : மார் 13, 2013 12:00 AM ADDED : மார் 13, 2013 07:35 AM


Follow on Google
அ நிறம் | அளவு

இதுகுறித்து பிரதமருக்கு, கருணாநிதி எழுதிய கடிதத்தின் விவரம்: மத்திய அரசு பணியாளர் தேர்வாணையம், ஐ.ஏ.எஸ்., - ஐ.பி.எஸ்., - ஐ.எப்.எஸ்., உள்ளிட்ட சிவில் சர்வீசஸ் மெயின் தேர்வில், சில மாற்றங்களை அறிவித்துள்ளது. பிராந்திய மொழி இலக்கியத்தில் பட்டம் பெற்றவர்கள் மட்டுமே, அந்த மொழியில் தேர்வு எழுதலாம் என்ற இந்த மாற்றம், கிராமப்புற மாணவர்களுக்கு கடும் பாதிப்பை ஏற்படுத்தும்.

இதனால், தேர்ச்சி பெற்ற, 25 மாணவர்கள் மட்டுமே அந்த பிராந்திய மொழிகளில் விடை எழுத முடியும். இதன் மூலம் தேர்வு எழுதுபவர்கள் கட்டுப்படுத்தப் படுகின்றனர். அதே நேரத்தில், இந்தி மற்றும் ஆங்கிலத்தில் தேர்வு எழுதுபவர்களுக்கு, இது போன்ற கட்டுப்பாடுகள் பொருந்தாது என்பது குறிப்பிடத்தக்கது.

தமிழ் இலக்கியத்தை விருப்ப பாடமாக தேர்ந்தெடுத்து இருந்தாலும், தமிழ் இலக்கிய பட்டதாரிகள் மட்டுமே, தமிழ் வழியில் தேர்வு எழுத முடியும்.இதுபோன்ற கட்டுப்பாடுகள், சிவில் சர்வீசஸ் தேர்வு எழுதும் கிராமப்புற மாணவர்களுக்கு. ஒரு தடையாக உள்ளது. அவர்கள் இந்தி அல்லது ஆங்கில வழியில் கல்வி பயில வேண்டிய நிலை ஏற்பட்டுள்ளது.

மத்திய அரசு பணியாளர் தேர்வாணையத்தின் புதிய தேர்வு முறை மாற்றம், இந்தியை மறைமுகமாக திணிப்பது போல உள்ளது. நேருவின் வாக்குறுதியை மீறுவதாக உள்ளது.

மேலும் இது, கிராமப்புற மற்றும் நகர்புற மாணவர்களிடையே ஆரோக்கியமற்ற, சமநிலையற்ற சூழலை உருவாக்குவதாக உள்ளது. எனவே, மத்திய அரசு பணியாளர் தேர்வாணையத்தின் புதிய தேர்வு முறையை, உடனடியாக வாபஸ் பெற வேண்டும்.

இந்திய அரசியல் அமைப்பு சட்டத்தில் அங்கீகரிக்கப்பட்ட, ஏதாவது ஒரு மொழியில் மத்திய அரசு பணியாளர் தேர்வு எழுத அனுமதிக்க வேண்டும். அகில இந்திய சர்வீசஸ் தேர்வுகளை, அனைத்து பிராந்திய மொழியிலும் நடத்த வேண்டும் என்பது, தி.மு.க., வின் நீண்ட நாள் கோரிக்கை. இவ்வாறு கடிதத்தில் குறிப்பிட்டுள்ளார்.

ம.தி.மு.க., பொதுச்செயலாளர் வைகோ வெளியிட்டுள்ள அறிக்கையில், "ஐ.ஏ.எஸ்., புதிய தேர்வு முறையை ரத்து செய்ய வேண்டும்" என மத்திய அரசுக்கு கோரிக்கை விடுத்துள்ளார்.

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us