தினமலர்
சினிமா
டிவி
Podcast
iPaper
கோயில்கள்
புத்தகங்கள்
Subscription
திருக்குறள்
கடல் தாமரை
Dinamalar Logo

 

/செய்திகள்/கல்விமலர்/செய்திகள்/பள்ளிப் பாடத்திட்டத்தில் நல்லொழுக்க பாடம் கட்டாயமாக்கப்பட வேண்டும்

பள்ளிப் பாடத்திட்டத்தில் நல்லொழுக்க பாடம் கட்டாயமாக்கப்பட வேண்டும்

பள்ளிப் பாடத்திட்டத்தில் நல்லொழுக்க பாடம் கட்டாயமாக்கப்பட வேண்டும்


UPDATED : மார் 13, 2013 12:00 AM

ADDED : மார் 13, 2013 12:36 PM

Follow on GoogleFavourite on Google

UPDATED : மார் 13, 2013 12:00 AM ADDED : மார் 13, 2013 12:36 PM


Follow on Google
அ நிறம் | அளவு

தினமலர் கல்விமலருக்கு நேரு கல்வி நிறுவனங்களின் செயலர் கிருஷ்ணகுமார் அளித்த பேட்டி:

சமீபகாலமாக கலை மற்றும் அறிவியல் பட்டதாரிகளை ஐடி நிறுவனங்கள், தங்களது பணிகளுக்கு அதிகளவில் தேர்வு செய்கின்றன. பொறியியல் முடித்தவர்களை பணிக்கு அமர்த்தினால், அவர்கள் வேறு நிறுவனங்களுக்கு எளிதாக மாறிவிடும் வாய்ப்பு அதிகம். அதுவே கலை அறிவியல் படித்தவர்கள் குறைந்தபட்சம் மூன்று ஆண்டுகள் வரை ஒரே நிறுவனத்தில் பணிபுரிகின்றனர், என்ற எண்ணம் தற்போது ஐடி நிறுவனங்களிடம் காணப்படுகிறது. எனவே, கலை அறிவியல் மாணவர்களுக்கும் அதிக ஊதியத்தில் வேலை வாய்ப்பு என்பது பிரகாசமாக உள்ளது. இன்போசிஸ், டி.சி.எஸ்., போன்ற பிரபல ஐடி நிறுவனங்களுடன் பாரதியார் பல்கலைக்கழகம் ஒப்பந்தம் செய்துள்ளது இங்கே குறிப்பிடத்தக்கது. அதேபோல், சிறந்த பொறியியல் மாணவர்களுக்கு வாய்ப்புகள் எப்போதும் உள்ளன.

நிதி பற்றாக்குறையால், அனைவருக்கும் பள்ளிப் படிப்பை வழங்குவதில் அரசாங்கம் அதிக கவனம் செலுத்துகிறது. எனினும், உயர்கல்வி பெறுவோரின் எண்ணிக்கை 18 சதவீதமாக உள்ள நிலையில், இன்னும் ஏழு சதவீதம் உயர்த்த வேண்டும் என்றும் விரும்புகிறது. இந்த ஏழு சதவீதம் இந்திய மக்கள் தொகையைப் பொறுத்தவரை, மிகப்பெரிய எண்ணிக்கையாகும். இந்த இலக்கை அடைய அதிகப்படியான கல்வி நிறுவனங்கள் தேவைப்படுகின்றன. அரசு கல்வி நிறுவனங்களால் மட்டும் இது சாத்தியமில்லை. தனியார் கல்வி நிறுவனங்களில் செலவு அதிகம் என்ற கருத்து முற்றிலும் சரியல்ல. 30 சதவீத கல்வி நிறுவனங்கள் அவ்வாறு இருக்கலாம். மீதமுள்ள 70 சதவீத தனியார் கல்வி நிறுவனங்கள் சேவைக்காக கல்வியை வழங்குவதாகவே கருதுகிறேன்.

கல்வி நிறுவனங்கள் பாட ரீதியான கண்காட்சி, நிகழ்ச்சிகளை நடத்தி, அதில் மாணவ, மாணவிகளை ஈடுபடுத்துவதால், கூச்சத்தை தவிர்த்து, குழு செயல்பாடு மற்றும் தலைமைப் பண்புகளை வளர்க்க உதவும்.

இளைஞர்கள் நற்பண்புகளுடன் செயல்பட பள்ளிப் பருவம் முதலே நல்லொழுக்க சிந்தனைகள் அனைத்து பாடத்திட்டத்திலும் சேர்க்கப்பட வேண்டும். கல்லூரிப் பருவத்தில் 3 முதல் 5 ஆண்டுகளில் மாணவர்களிடம் பெரிய மாற்றத்தை கொண்டுவருவது கடினம். எனவே, 15 ஆண்டுகால பள்ளிப் பருவத்தில் நற்சிந்தனைகளை போதித்து நற்பண்புகளை வளர்த்தல், நாட்டின் மேம்பாட்டிற்கும் சிறந்தது.

ஆசிரியர்களை ஊக்குவிக்கும் வகையில் நேரு கல்வி அறக்கட்டளை விருதுகளை வழங்கிவருகிறது. தற்போது பள்ளி ஆசிரியர்களுக்கும் வழங்கப்பட உள்ளது. அடுத்த ஆண்டு கேரளாவில் மருத்துவக் கல்லூரி துவங்கவும், அதனைத் தொடர்ந்து பள்ளிகளை துவங்கவும் திட்டமிட்டு வருகிறோம்.

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us