டி.என்.பி.எஸ்.சி., அறிவிப்பால் தேர்வர்கள் அதிருப்தி
டி.என்.பி.எஸ்.சி., அறிவிப்பால் தேர்வர்கள் அதிருப்தி
UPDATED : மார் 14, 2013 12:00 AM
ADDED : மார் 14, 2013 10:19 AM
புதிய பாடத்திட்டத்தின்படி, முதலில் நடக்கும் தேர்வுகளுக்கு, குறிப்பிட்ட கால இடைவெளியை, தேர்வாணையம் வழங்கியிருக்க வேண்டும். அப்படியில்லாமல், உடனே, அமலுக்கு வருகிறது என்றால், எப்படி தயாராக முடியும் என, தேர்வர்கள், கேள்வி எழுப்புகின்றனர்.
பாடத்திட்டங்களை, பதிவிறக்கம் செய்து, அதற்கேற்ற புத்தகங்களை வாங்கி, படிக்க வேண்டும். இதற்கு, போதிய கால அவகாசத்தை, தேர்வாணையம் வழங்கவில்லை என, தேர்வர்கள் தெரிவிக்கின்றனர்.
தேர்வாணைய இணையதளம் முடங்கியது: குரூப்-1 முதல், குரூப்-4 வரையில், 10 வகையான போட்டித் தேர்வுகள் மற்றும் அதற்கான புதிய பாடத்திட்டங்கள், மொத்த தேர்வுத்தாள்கள், அதற்கான மதிப்பெண்கள் உள்ளிட்ட முழு விவரமும், தேர்வாணைய இணையதளத்தில் (www.tnpsc.gov.in), நேற்று முன்தினம் இரவு, 11:00 மணிக்கு வெளியானது.
இந்த விவரங்களை அறிய, நேற்று ஒரே நேரத்தில், பல்லாயிரக்கணக்கான தேர்வர்கள், தேர்வாணைய இணையதளத்தை பார்வையிட்டதால், பிற்பகலில், இணையதளம் முடங்கியது. நீண்ட நேரம் வரை, இணையதளம் இயங்கவில்லை. முன்பக்கம் இயங்கிய போதும், பாடத்திட்ட பக்கங்கள், இயங்கவில்லை. இதனால், தேர்வர்கள், கடும் சிரமப்பட்டனர்.
